‘பாகிஸ்தான் அதிகாரிகளை அமெரிக்காவில் அனுமதிக்க கூடாது’ ஹார்வர்டு பல்கலைகழக மாணவர்கள் கடிதம்!
பாகிஸ்தான் மாநாட்டுக்கு வரும் பாகிஸ்தான் அதிகாரிகளின் விசாவை ரத்து செய்யுமாறு ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
‘பாகிஸ்தான் அதிகாரிகளை அமெரிக்காவில் அனுமதிக்க கூடாது’ ஹார்வர்டு பல்கலை கழக மாணவர்கள் கடிதம்! (REUTERS)
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் விதம் முழு உலகின் கண்களையும் திறந்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில், ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுக்கு பாகிஸ்தான் அதிகாரிகளை அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று கடிதம் எழுதியுள்ளனர்.
அமெரிக்காவில் நுழைய அனுமதிக்க கூடாது
சமீபத்தில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் மாநாட்டில் பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்று மாணவர்கள் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். தீவிரவாதத்தை ஆதரிப்பதற்காக அவர்களை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும், அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
