தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Greetings From President Dravupati Murmu On The Occasion Of Tamil New Year

Dravupati :தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

Divya Sekar HT Tamil
Apr 14, 2023 07:29 AM IST

President Dravupati Murmu : பைசாகி, மேஷாதி, வைஷாகாதி, புத்தாண்டு, விஷு, நப பார்ஷா, போஹாக் பிஹு பண்டிகைகளையொட்டி நாட்டு மக்களுக்குக் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரவுபதி முர்மு -  கோப்புப்படம்.
திரவுபதி முர்மு - கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதைப்போல விஷு, பைசாகி, பிஹு என பல்வேறு மாநிலங்களில் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. எல்லா கொண்டாட்டங்களிலும் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயிகள் வசந்தகால அறுவடை காலத்தை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடடுகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் இந்த கொண்டாட்டத்தின் பெயர்கள் அழைக்கப்படுகிறது. 

அசாமில் பிஹு, பஞ்சாபில் லோஹ்ரி மற்றும் பைசாகி, கேரளாவில் விஷு மற்றும் தமிழ்நாட்டில் புத்தாண்டு. இந்த நேரத்தில், மக்கள் மண்ணின் வளத்திற்காக பிரார்த்தனை செய்து அறுவடையை கொண்டாடுகிறார்கள். இந்த மாதத்தில் பல அறுவடைத் திருவிழாக்கள் கொண்டாடப்படவுள்ளது.

இதையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " பைசாகி, விஷு, பிஹு, நபா பர்ஷா, வைஷாகாதி மற்றும் புத்தாண்டு பிறப்பு ஆகிய பண்டிகைகளின் புனிதமான இந்த தருணத்தில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்"எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “பைசாகி, மேஷாதி, வைஷாகாதி, புத்தாண்டு, விஷு, நப பார்ஷா, போஹாக் பிஹு ஆகிய மகிழ்ச்சியான விழாக்களையொட்டி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான, மனமார்ந்த வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் இந்த விழாக்கள் நமது பன்முக கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன. இவை ஒற்றுமை, நல்லிணக்க, சகோதரத்துவ, உணர்வின் அடையாளமாக இருக்கின்றன.

இயற்கையின் செழிப்பையும், அறுவடையின் கொடையையும் நாம் கொண்டாடும் தருணத்தில் இயற்கை அன்னையுடனான நமது உறவை நாம் ஒரு கணம் பிரதிபலிக்கவேண்டும். நம்மை பாதுகாக்கின்ற இயற்கை வளங்களை பாதுகாக்கும் நமது பொறுப்பையும் உணரவேண்டும். நமக்கு உணவையும், ஊட்டச்சத்தையும் வழங்குவதற்கு அயராது பாடுபடும் நமது விவசாயிகளின் அர்ப்பணிப்புக்கு மிகுந்த மதிப்பையும், நன்றியையும் நாம் உரித்தாக்க வேண்டும்.

இந்த நன்னாளில் நமது மகத்தான தேசத்தை அடையாளப்படுத்தும் ஒற்றுமை, பன்முகத்தன்மை, அனைவரையும் உட்படுத்துதல் என்ற மாண்புகளுக்கான நமது உறுதிப்பாட்டை நாம் வலுப்படுத்துவோம். நமது பன்முகத்தன்மையை நாம் கொண்டாடுவோம். நமது மனிதாபிமானத்தைப் பகிர்வோம். இந்த விழாக்கள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்