Murder : ரயில் நிலையம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் சுட்டுக்கொலை.. போலீசார் தீவிர விசாரணை!
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கயா ரயில் நிலையம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி ஆசிரியர் சுட்டுக்கொலை
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கயா சந்திப்பு ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அரசுப் பள்ளி ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இறந்தவர் கயாவில் உள்ள கவுதம் புத்தர் காலனியில் வசிக்கும் நரேந்திர குமார் (44). இவர் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
இவர் காலையில் ரயிலில் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். வியாழன் அன்று, அவர் கயா நிலையத்திற்கு தாமதமாக வந்த சசரம்-தன்பாத் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் ஏறினார்.