Tamil News  /  Nation And-world  /  Google Doodle Celebrity Mario Molina
இன்று கூகுள் டூடுலில் இடம்பெற்றுள்ள அறிவியல் அறிஞர் மரியோ மொலினா
இன்று கூகுள் டூடுலில் இடம்பெற்றுள்ள அறிவியல் அறிஞர் மரியோ மொலினா

Google Doodle : இன்று கூகுள் டூடுல் பிரபலம்…. யார் இந்த மரியோ மொலினா?

19 March 2023, 10:44 ISTPriyadarshini R
19 March 2023, 10:44 IST

இன்று கூகுள் டூடுலில் இடம்பெற்றுள்ளவர் மரியோ மொலினா, இவர் மெக்சிகோவைச் சேர்ந்த வேதியியல் நிபுணர் மற்றும் நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர். ஓசோன் மண்டலத்தில் உள்ள துளை குறித்து கண்டுபிடித்தவர். 

க்ளோரோப்ளுரோகார்பன் ஓசோன் படலத்திற்கு ஏற்படும் ஆபத்து குறித்த இவரின் கண்டுபிடிப்புக்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மெக்சிகோவில் இருந்து நோபல் பரிசு பெற்ற முதல் அறிவியலாளர்.

ட்ரெண்டிங் செய்திகள்

இவர், கலிபோர்னியா பல்க்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக இருந்துள்ளார். மேலும் மெக்சிகோ அதிபருக்கு இவர் சுற்றுச்சூழல் ஆலோசகராகவும் இருந்துள்ளார். 1943ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி பிறந்த இவர், 2020ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பிஹெச்.டி முடித்த இவர், வேதியியல் தொடர்பான நிறைய ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

மொலினா, போஸ்ட் டாக்டோரல் பெஃல்லோவாக பேராசிரியர் எஃப்.ஷீர்வுட் ரோவ்லாண்டின் ஆய்வகத்தில் சேர்ந்தார். அங்கு நடந்த அணு ஆராய்ச்சி அவர் க்ளோரோஃப்ளுரோகார்பன் வாயுவை ஆய்வதற்கு வழிவகுத்தது.

இந்த வாயு, பிரிட்ஜ்கள், காற்றில் கலக்கக்கூடிய ஸ்பிரேகள் மற்றும் பிளாஸ்டிக் நுரைகள் ஆகியவை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பாதிப்பை கொடுக்காத வாயுக்கள்தான். எனினும், மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து வெளியேறும் இந்த வாயுக்கள் வளிமண்டலத்தில் குவிவது கண்டுபிடிக்கப்பட்டு, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை ஆராய்ந்தார். குளோரோஃப்ரோகார்பன்கள் சிஎஃப்சி என்றழைக்கப்படுகிறது. அதற்கு முன் சிஎஃப்சிக்கு இணையாக பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் என்ன கண்டுபித்து ரோவ்லண்டும், மொலினாவும் ஓசோன் டிப்ளீஷன் தியரியை உருவாக்கினார்கள். அதாவது ஓசோன் படலம் எப்படியெல்லாம் சிதைந்து வருகிறது. அதற்கு இந்த சிஎஃப்சி எவ்வளவு காரணமாகிறது என்பதையும் விளக்கினர்.

கூகுள் டூடுல்
கூகுள் டூடுல்

சிஎஃப்சி சிதையும்போது உருவாகும் குளோரின் அணுக்கள் ஓசோன் படலத்தை அழிக்கும் வினையூக்கிகள் என யூகித்தனர். அவை ஓசோன் படலத்தை தொடர்ந்து பாதிக்கும் என்பதையும் கண்டுபிடித்தனர். சிஃப்சி பதப்படுத்தலுக்கும், வேதியல் உந்துவிசையாக பரவலாக பயன்படுத்தப்பட்ட காலத்தில், ஓசோன் படலத்திற்கு சிஎஃப்சியின் அச்சுறுத்தல் குறித்து அவர்கள் பேசியதுடன், அதை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். இவையெல்லாம் 1974ம் ஆண்டு நடந்தது. பின்னர் சிறிது சிறிதாக உலகமெங்கும் சிஎஃப்சியின் பயன்பாடு குறைக்கப்பட்டது. பின்னர் 1985ல் ஓசோன் படலத்தில் உள்ள துளையை ஜோசப் ஃபார்மன் கண்டுபிடித்தார். அது குளோரினால் ஏற்பட்டது என்று பின்னர் இவர்கள் கண்டுபிடித்தனர். இவருக்கு இந்த ஆராய்ச்சிக்காகத்தான் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவரது மனைவி லுயிசா டானும் ஒரு அறிவியலாளர்தான். 1973ம் ஆண்ட திருமணம் செய்துகொண்ட இவர்கள் 2005ம் ஆண்டு விவகாரத்து பெற்றனர். இவர் ஒரு முன்னணி அறிவியலாளர் பின்னர் அவர் குவாடாலுபே அல்வரெஸ் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டுள்ள இந்த காலத்தில் நினைவுகொள்ள வேண்டிய முக்கிய நபர் மரியோ மொலினா, இவர்தான் இன்றைய கூகுள் டூடுலை அலங்கரிக்கும் முக்கியமான நபர். அவரது பிறந்த நாளில் அவர் குறித்து பேசும் இந்த வேளையில், நமது இளைஞர்களும் இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்கும் பொருட்களை கண்டுபிடித்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

டாபிக்ஸ்