தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவிடமிருந்து விவாகரத்து கோரி கணவர் மனு.. மீண்டும் பேசுபொருளான நடிகை..
தங்கக் கடத்தல் வழக்கு: தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நடிகை ரன்யா ராவிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது கணவர் ஜதின் ஹுக்கேரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தங்கக் கடத்தல் வழக்கு: தங்கக் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள நடிகை ரன்யா ராவை, அவரது கணவர் ஜதின் ஹுக்கேரி விவாகரத்து செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ரன்யா ராவின் கணவர் ஜதின் ஹுக்கேரி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், நீதிமன்றத்தில் இன்னும் இந்த வழக்கிற்கான எண்கள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், ஏற்கனவே இவர்களின் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருப்பதால் விவாகரத்து செய்ய திட்டமிட்டு வருவதாக ஜதின் கூறியுள்ளார்.
கல்யானம் ஆனதுல இருந்தே பிரச்சனை
"கல்யாணம் ஆனதுல இருந்தே பிரச்சனை ஆரம்பிச்சுடுச்சு. திருமணமான முதல் நாளிலிருந்து நான் வலியிலும் வேதனையிலும் இருக்கிறேன். இன்று நான் விவாகரத்து கோரும் முடிவுக்கு வந்துள்ளேன்" என்று ஜதின் மனு தாக்கல் செய்த பிறகு ஊடகங்களிடம் கூறினார். ஏற்கனவே தங்கக் கடத்தில் வழக்கில் தொடர்ந்து ரன்யா ராவின் பெயர் அடிபட்டு வரும் நிலையில் தற்போது விவாகரத்து வழக்கும் சேர்ந்துள்ளது.