Makaravilaku Puja: சபரிமலையில் மகரவிளக்குப் பூஜைக்கான நெய் அபிஷேகம் இன்றுடன் நிறைவு-ghee abhishekam for makaravilaku puja at sabarimala ends today - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Makaravilaku Puja: சபரிமலையில் மகரவிளக்குப் பூஜைக்கான நெய் அபிஷேகம் இன்றுடன் நிறைவு

Makaravilaku Puja: சபரிமலையில் மகரவிளக்குப் பூஜைக்கான நெய் அபிஷேகம் இன்றுடன் நிறைவு

Marimuthu M HT Tamil
Jan 19, 2024 03:07 PM IST

சபரிமலையில் மகரவிளக்குப் பூஜைக்கான நெய் அபிஷேகம் நிறைவு பெற்றது.

சபரிமலை
சபரிமலை (ANI Pic Service)

ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதம் மாலையணிந்து விரதமிருந்து அங்கு சென்று சாமிதரிசனம் செய்து வருகின்றனர். இந்த மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை ஒட்டி, கடந்தாண்டு நவம்பர் 16ஆம் தேதி ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டது. 41 நாட்களுக்குப் பின், டிசம்பர் 27ஆம் தேதி மண்டலபூஜை முடிந்து, கோயில் நடை திறக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனவரி 19ஆம் தேதி இன்று காலை 9 மணியுடன் மகர விளக்குப் பூஜைக்கான, நெய் அபிஷேகம் முடிந்தது.

இன்று இரவு பூஜைக்குப் பின், மாளிகப்புரம் மண்டபத்தில் இருந்து கிளம்பும் ஐயப்பசாமி ஊர்வலம், சரம்குத்தி வரை சென்று மீண்டும் சந்நிதானம் திரும்புகிறார். 

இந்நிலையில் சனிக்கிழமையான நாளை இரவு 10 மணியுடன், சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படுகிறது. அதன்பின், அரிவராசனம் பாடி, நடைசாத்தப்படும்.

அதன்பின், ஜனவரி 22ஆம் தேதி காலை 5:30 மணிக்கு நடை திறப்பு நடைபெற்று திருவாபரணங்கள் பந்தளத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அதன்பின், காலை 6 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மகரவிளக்குப் பூஜை முடிகிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.