தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Gabriel Attal Becomes France's Youngest, First Gay Pm

First Gay PM: பிரான்ஸ் பிரதமராகும் இளம் தன்பாலின ஈா்ப்பாளா்..யார் இந்த கேப்ரியல் அட்டல்..!

Karthikeyan S HT Tamil
Jan 09, 2024 07:33 PM IST

பிரான்ஸ் நாட்டின் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து இளம் தன்பாலின ஈர்ப்பாளா் பிரதமராக பதவியேற்க உள்ளாா்.

பிரான்ஸ் பிரதமராகும் இளம் தன்பாலின ஈா்ப்பாளா் கேப்ரியல் அட்டல்.
பிரான்ஸ் பிரதமராகும் இளம் தன்பாலின ஈா்ப்பாளா் கேப்ரியல் அட்டல். (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸின் அதிபராக இம்மானுவேல் மேக்ரான் பதவி வகித்து வரும் நிலையில், சமீபத்தில் குடிபெயா்வுச் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தங்களால் அவரது ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. இதையடுத்து, தனது மீதமுள்ள ஆட்சி காலத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து பிரான்ஸ் மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்ற முயற்சியில் இம்மானுவேல் ஈடுபட்டுள்ளார். இதன் ஒருபகுதியாக அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டுவர அவர் திட்டமிட்டுள்ளாா்.

இந்நிலையில், பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போா்ன் தனது பதவியை கடந்த திங்கட்கிழமை ராஜினாமா செய்தாா். இதையடுத்து பிரான்ஸ் நாட்டின் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் கேப்ரியல் அட்டலை, அந்நாட்டின் பிரதமராக நியமித்துள்ளாா் அதிபர் இமானுவேல் மேக்ரான்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினா் பேட்ரிக் விக்னல், கேப்ரியல் அட்டல் பிரான்சின் இளைய பிரதமராகவும், வெளிப்படையாக ஓரினச் சேர்க்கையாளராக இருக்கும் முதல் நபராகவும் இருப்பார் என்று தெரிவித்துள்ளாா்.  

பிரான்ஸின் புதிய பிரதமர் கேப்ரியல் அட்டல் யார்?

சோசியலிச கட்சியின் உறுப்பினராக இருந்த அட்டல், 2016 ஆம் ஆண்டு இம்மானுவேல் மேக்ரான் தொடங்கிய மறுமலர்ச்சி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டாா். கொரோனா பெருந்தொற்றின் போது அரசாங்க செய்தித் தொடர்பாளராக இருந்த இமானுவேல் மேக்ரானின் நெருங்கிய கூட்டாளி கேப்ரியல் அட்டல் ஆவார். சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் நாட்டின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகளில் ஒருவரான இவர், ரேடியோ நிகழ்ச்சிகளிலும், நாடாளுமன்றத்திலும் எளிமையான அமைச்சராக பெயர் எடுத்துள்ளார். கேப்ரியல் அட்டல், தன்னை ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என வெளிப்படையாக அறிவித்தவர் ஆவர்.

இமானுவேல் மேக்ரோன் கேப்ரியல் அட்டாலை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்தது ஏன்?

இமானுவேல் மேக்ரோன் 2022 இல் தனது அறுதிப் பெரும்பான்மையை இழந்ததிலிருந்து மிகவும் கொந்தளிப்பான நாடாளுமன்றத்தை சமாளிக்க போராடி வருகிறார். இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் கேப்ரியல் அட்டல் இணைந்து அரசாங்கத்திற்கு ஒரு புதிய பாதையை கொண்டு வர முடியும். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பிரான்ஸ் ஜனாதிபதியே பெரும்பாலான முடிவுகளை எடுப்பார் என்று கூறினார்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்