Change From June 1: ஓட்டுநர் உரிமம் முதல் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை வரை: ஜூன் 1 முதல் என்னென்ன மாற்றங்கள்?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Change From June 1: ஓட்டுநர் உரிமம் முதல் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை வரை: ஜூன் 1 முதல் என்னென்ன மாற்றங்கள்?

Change From June 1: ஓட்டுநர் உரிமம் முதல் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை வரை: ஜூன் 1 முதல் என்னென்ன மாற்றங்கள்?

Marimuthu M HT Tamil
Jun 01, 2024 08:32 AM IST

Change From June 1: ஜூன் மாதத்தில், சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிகளை அமல்படுத்துகிறது. மேலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலைகளும் மாறுதலுக்குள்ளாகியுள்ளது.

Change From June 1: ஓட்டுநர் உரிமம் முதல் எல்பிஜி சிலிண்டர் கேஸ் விலை வரை: ஜூன் 1 முதல் என்னென்ன மாற்றங்கள்?
Change From June 1: ஓட்டுநர் உரிமம் முதல் எல்பிஜி சிலிண்டர் கேஸ் விலை வரை: ஜூன் 1 முதல் என்னென்ன மாற்றங்கள்?

அனைத்து துறைகளிலும் சீரான தன்மையைப் பராமரிக்க புதிய மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மாற்றங்களைச் செயல்படுத்த அரசாங்கம் விரும்புகிறது. ஜூன் மாதத்தில், சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிகளை செயல்படுத்தும் என அறிவித்துள்ளது. மேலும் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் மாறும் என்று தெரிகிறது. 

ஜூன்  1-க்குப் பிறகு மாறும் விஷயங்களின் பட்டியல் இங்கே:

1.ஓட்டுநர் உரிமம் பெறுதல்: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான செயல்முறை ஜூன் 1-க்குப் பிறகு சில மாற்றங்களுக்கு உட்படுகிறது. ஏனெனில் சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் விண்ணப்பதாரர்களுக்கு தனியாருக்குச் சொந்தமான இடங்களிலும், ஓட்டுநர் சோதனைகளை எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. தனியார் ஓட்டுநர் சோதனை எடுக்கும் வசதிகளை அரசு சான்றளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் ஓட்டுநர் உரிம சோதனையை எடுத்து வெற்றிகரமான சான்றிதழை, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) சமர்ப்பித்தால் உரிமம் பெறுவது எளிதாகிறது. 

2. ஆதார் அட்டையை புதுப்பித்தல்: உங்கள் ஆதார் அட்டையில் உள்ள தவறுகள் காரணமாக நீங்கள் பல்வேறு அரசுத் துறைகளைச் சுற்றி வந்தால், ஜூன் 14 ஆம் தேதிக்குள் உங்கள் தனிப்பட்ட விவரங்களில் மாற்றங்களைச் செய்ய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. மக்கள் தங்கள் விவரங்களை ஆன்லைனில் மாற்றலாம் அல்லது அருகிலுள்ள பொது சேவை மையத்திற்குச் சென்று ஆதார் அட்டையைப் புதுப்பிக்கலாம். 

3. வங்கி விடுமுறைகள்: வங்கி விடுமுறைகளின் பட்டியல் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். குறிப்பாக மாநில வங்கிகளுக்கு மாறுபடும். ஆனால், தேவையற்ற தொந்தரவுகளைத் தவிர்க்க அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பொதுவான விடுமுறை பட்டியல் உள்ளது. ஜூன் மாதத்தில், இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட பத்து வங்கி விடுமுறைகள் உள்ளன. மேலும், ஜூன் 17ஆம் தேதி ஈத்-உல்-ஆதா மற்றும் ஜூன் 14ஆம் தேதி ராஜ சங்கராந்தி ஆகிய பண்டிகைகள் காரணமாகவும் வங்கிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எல்பிஜி சிலிண்டர்களின் விலை நிலவரம்:

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம். சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

இந்திய அரசாங்கம் தற்போது தமிழ்நாட்டில் குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு வீட்டு உபயோக எல்பிஜி எரிவாயு உருளையை (14.2 கிலோ) மானிய விலையில் வழங்கி வருகிறது. மானியத் தொகை நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 

அதன்படி, சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைந்து ரூ.1840.50க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.818.50-க்கு விற்பனையாகிறது. 

குறிப்பாக பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்கும் நபர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இவர்களுக்கு மாதம் ஒன்று என்ற வீதத்தில் வருடத்திற்கு 12 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் மானியத்தை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே இனிவரும் நாட்களில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்கும் நபர்களுக்கு ரூ.200 மானியம் சேர்த்து வழங்கப்படும் என கூறியுள்ளனர். நமது தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 35 லட்சம் பேருக்கு இந்த மானியம் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.