Brazil Helicopter Crash: பிரேசில் ஹெலிகாப்டர் விபத்து.. 4 பேர் உடல் நசுங்கி பலி!
தென் அமெரிக்காவின் பெருநகரமான பிரேசிலின் சாவ் பாலோவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது. ஏர் டாக்ஸி நிறுவனத்தை சேர்ந்த அந்த ஹெலிகாப்டர் நடுவானில் பறந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. உடனே விமானி அதனை தரையிறக்க முற்சித்து உள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அதற்குள் ஹெலிகாப்டர் அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் உள்ள தெருவில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தெருவில் சென்று கொண்டிருந்த 9 வாகனங்களும் சேதமானது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும் இதில் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தெருவில் சென்ற வாகனங்களில் இருந்த பலர் காயம் அடைந்தனர்.
மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.