தாவூத் இப்ராகிமின் 4 பூர்வீக சொத்துகள் இன்று ஏலம்
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான அவரது சிறுவயது வீடு உட்பட 4 சொத்துகள் ரூ.19 லட்சத்துக்கு ஏலம் விடப்பட உள்ளன.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் 4 சொத்துகள் ரூ.19 லட்சத்துக்கு ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் விடப்பட்டுள்ள நான்கு சொத்துகளில் ஒன்று தாவூத் இப்ராகிம் தனது குழந்தைப் பருவத்தினை கழித்த வீடு என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
யார் இந்த தாவூத் இப்ராஹிம்?: 1993 மும்பை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி மற்றும் இந்தியாவின் அதி தீவிரமாக தேடப்படும் குற்றாளியாக இருப்பவர், தாவூத் இப்ராஹிம். பல தசாப்தங்களாக இவர் பாகிஸ்தானில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பேரழிவுகரமான குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
தாவூத் இப்ராஹிம் கராச்சியின் மேல்மார்க்கெட் கிளிஃப்டன் பகுதியில் வசிக்கிறார் என்று நம்புவதாக இந்திய அதிகாரிகள் அடிக்கடி கூறியுள்ளனர். ஆனால், அவர் அந்த நாட்டில் இருப்பதை பாகிஸ்தான் அடிக்கடி மறுத்து வருகிறது.
ஜனவரி 2023-ல், அவரது மருமகன் தேசிய புலனாய்வு முகமையிடம், அவர் பாகிஸ்தானில் மறுமணம் செய்து கொண்டதாகவும், கராச்சியில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் கூறினார்.
தாவூத் இப்ராகிமின் இரண்டாவது மனைவியின் பெயர் மைசாபின் எனவும்; அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர் என்றும் ஒரு மகன் உள்ளனர் என்றும் தெரிகிறது. அதாவது இப்ராகிமுக்கு மருக் (ஜாவேத் மியான்தத்தின் மகன் ஜுனைத்தை திருமணம் செய்தவர்), மெஹ்ரின் (திருமணமானவர்), மற்றும் மஜியா (திருமணமாகாதவர்) மற்றும் ஒரு மகன் மோஹின் நவாஸ் (திருமணமானவர்) ஆகிய நான்கு பிள்ளைகள் பாகிஸ்தானில் உள்ளனர் என்று தாவூத்தின் சகோதரியின் மகன் அலிஷா பார்கர் கடந்த ஆண்டு நவம்பரில் இதுதொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமையிடம் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தாவூத் இப்ராகிமின் சொத்துகள்?:
மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மும்பாகே கிராமத்தில் 4 ஏக்கர் விவசாய நிலம் அமைந்துள்ளது.
இந்த சொத்துகள் 1976ஆம் ஆண்டின் கடத்தல்காரர்கள் மற்றும் அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டன.
தாவூத் இப்ராகிமின் சில சொத்துகளை வழக்கறிஞரும் சிவசேனா உறுப்பினருமான அஜய் ஸ்ரீவஸ்தவா ஏலம் எடுத்திருந்தார். இந்நிலையில் அவர் இந்த ஏலத்திலும் பங்கேற்பார் என என்.டி.டி.வி செய்தி தெரிவிக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் தாவூத்தின் பல சொத்துகள் அரசால் ஏலம் விடப்பட்டுள்ளன. தாவூத் இப்ராகிமின் சொத்துகளில் முதல் ஏலம் 2000ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது தாவூத் இப்ராஹிமுக்குப் பயந்து அந்த ஏலத்தை யாரும் எடுக்கவில்லை.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மும்பாகே கிராமத்தைச் சேர்ந்த தாவூத் இப்ராஹிமின் குழந்தை பருவ வீடு உட்பட ஆறு சொத்துகள் 2020ஆம் ஆண்டில் ஏலத்திற்கு வந்தன. கடந்த 2017-ம் ஆண்டு தெற்கு டெல்லியில் இப்ராகிமுக்கு சொந்தமான ஹோட்டல் உள்பட 3 சொகுசு பங்களாக்களை மத்திய அரசு விற்பனை செய்தது.
சில மாதங்களுக்கு முன்பு, தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்