Dr Manmohan Singh : ‘கேம்பிரிட்ஜ்.. ஆக்ஸ்போர்டு.. பொருளாதாரத்தில் ஹானர்ஸ் பட்டம்..’ யார் இந்த மன்மோகன் சிங்!
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில், இரவு 9.51 மணிக்கு அவர் தனது இறுதி மூச்சை விட்டார்.

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் இப்போது நம்மிடையே இல்லை. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தனது 92-வது வயதில் காலமானார். உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து வியாழக்கிழமை இரவு அவர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் இரவு 9.15 மணிக்கு தனது இறுதி மூச்சை விட்டார் என்று எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வாத்ரா இரவு 10.45 மணியளவில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தார். மறுபுறம், கர்நாடகாவின் பெலகாவியில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த பேரணியை காங்கிரஸ் ரத்து செய்துள்ளது.
மன்மோகன் சிங் கடந்து வந்த பாதை
டாக்டர் மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். 33 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்றார். 1998 முதல் 2004 வரை மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.