Basavaraj Bommai: மெக்கானிக்கல் இன்ஜினியர் டூ முதலமைச்சர்.. யார் அந்த பசவராஜ் பொம்மை? பிறந்தநாளில் ஓர் அலசல்..
Basavaraj Bommai: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான பசவராஜ் பொம்மை இன்று அவரது பிறந்தாளைக் கொண்டாடுகிறார். அவரைப் பற்றிய சில தகவல்களை இந்தத் தொகுப்பில் காணலாம்,

Basavaraj Bommai: பசவராஜ் பொம்மை. இவர் கர்நாடக மாநிலத்தின் 23வது முதலமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டவர், இவர், இந்த பொறுப்புக்கு வரும் முன் இருந்த வாழ்க்கை குறித்தும் அரசியல் நகர்வுகள் குறித்தும் இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
ஆர்.எஸ் பொம்மையின் மகன்
கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர்களுள் ஒருவராக இருந்தவர் எஸ்.ஆர். பொம்மை. அவரது மகன் தான் இவர். தந்தையின் ஜக்கிய ஜனதா தளத்தில் கட்சிப் பொறுப்புகளை ஏற்று திறம்பட செயலாற்றி வந்த பசவராஜ் பொம்மை அங்கிருந்து விலகி 2008ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
பாஜகவில் கிடைத்த அங்கீகாரம்
இவர், கர்நாடக மாநில முன்னாள் முதலர்வரின் மகன் என்பதாலும், மாநிலத்தில் பெரும் வாக்கு வங்கி வைத்திருக்கும் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் பாஜகவில் பசவராஜ் பொம்மைக்கு கட்சியில் மதிப்பும் மரியாதையும் கிடைத்தது.
பின் அவர் 2008ம் ஆண்டே கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஹாவேரி மாவட்டத்தின் ஷிக்கான் தொகுதியில் போட்டியிட்டு வென்று, எம்எல்ஏ ஆனார்.
எடியூரப்பா ஆதரவு
அந்த சமயத்தில் இருந்து இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு மிகவும் நெருக்கமானவராக மாறினார். இதன் காரணமாக சில நாட்களிலே அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. நீர் வளத்துறை அமைச்சரான பொம்மை, அவர் போட்டியிட்ட தொகுதியில் 100 சதவீதம் திட்டத்தை நிறைவேற்றி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அமைச்சர் பதவி
இதைத் தொடர்ந்து, பசவராஜ் பொம்மை தான் தொடர்ந்து 4 முறை அந்தத் தொகுதியின் எம்எல்ஏ ஆனார். இது திட்டத்தை நிறைவேற்றயதற்காக மட்டும் அல்ல. அப்பகுதி முழுவதும் நிறைந்திருந்த லிங்காயத் சமூக மக்கள் தங்கள் செல்வாக்கை வெளிப்படுத்தவும் செய்த செயல் அது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக பொம்மையும் பல்வேறு துறைகளில் அமைச்சராக பதவி வகித்தார்.
முதல்வராக தேர்வு
இதற்கிடையில், கர்நாடக மாநிலத்தில் லிங்காயத் சமூக மக்கள் ஆதரவுடன் எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்று ஆட்சி அமைத்தார். அந்த சம.த்தில் பாஜகவின் விதிப்படி ஒருவர் 75 வயதுக்கு பின் கட்சியின் பொறுப்பில் இருக்க கூடாது என்பதால், அவர் முதல் பதவியையும் இழக்க நேர்ந்தது. இதனால் எடியூரப்பாவிற்ரு அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழும்போது, நடந்த போட்டியில் எடியூரப்பாவின் பேராதரவுடன் வெற்றி பெற்று 27 ஜூலை 2021ல் முதல்வரானார். இவர் கர்நாடக மாநிலத்தின் 4வது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முதவ்வர் ஆவார்.
செயல் திட்டங்கள்
இவர் பதவிக்கு வந்தவுடன், விதவைகள், ஊனமுற்றோருக்கு உதவித்தொகை, மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்ற முதல் மாநிலமாக கரநாடகாவை மாற்றியது, அங்கீகரிக்கப்படாத கோயில்களை இடி்பது. மதமாற்ற எதிர்ப்பு என பல அதிரடி அறிவிப்புகளில் கையெழுத்திட்டார்.
சிக்கல்கள்
அதே சமயம் அவர் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை, தொடர் கொலைகள், கட்டுக்கடங்காத வன்முறை, ஊட்டச் சத்து குறைந்த குழந்தைகள் என பல பிரச்சனைகளில் சிக்கியது. இதனால், 2023ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது பாஜக கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதனால் அவரது முதலமைச்சர் வாய்ப்பும் பறிபோனது.
கோட்டையை பறிகொடுத்த பசவராஜ்
பின், இவர் ஹாவேரி தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இத்தனை நாள் தன் இரும்புக் கோட்டையாக வைத்திருந்த ஹாவேரி சட்டப்பேரவை தொகுதியில் அவரது மகனை களமிறக்கினார். ஆனால், அவரது மகன் பரத், இஸ்லாமிய வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டு தன் குடும்பத்தின் இரும்புக் கோட்டையை பறிகொடுத்தார்.
இன்ஜினியராக தொடங்கிய வாழ்க்கை
இப்படி, பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வரின் மகனாக அரசியலுக்கு வருவதற்கு முன் அவர் மெக்கானிக்கல் இன்ஜினியராக தன் வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்தார். அதன் பின் தான் மெல்ல மெல்ல அரசியல் ஆர்வம் பெற்றார். அவர் இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

தொடர்புடையை செய்திகள்