Foreign Universities In India: வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி அனுமதி
University Grants Commission: வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களது வளாகங்களை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களது வளாகங்களை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு விதிகளில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்வி வளாகங்களை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission) ஒப்புதல் தேவை என்று அதன் தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களை அமைப்பதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதல் தேவை. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு 10 ஆண்டுகள் ஆரம்ப அனுமதி வழங்கப்படும். இந்தப் பல்கலைக்கழகங்கள் முழு நேர கல்வித் திட்டத்தை மட்டுமே வழங்க வேண்டும். ஆன்லைனில் அல்லது தொலைதூரக் கல்வித் திட்டத்தை வழங்க முடியாது.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தங்கள் இந்திய வளாகங்களில் வழங்கப்படும் கல்வியின் தரம் அவர்களின் முக்கிய வளாகத்திற்கு இணையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் வளாகங்களை அமைக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்களுடைய சேர்க்கை செயல்முறையைத் தாங்களே உருவாக்கிக் கொள்ள சுதந்திரம் அளிக்கப்படுகிறது." என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்