Dahi: இந்தியில் ‘தயிர்’ பெயர் : கடும் எதிர்ப்பால் உத்தரவை வாபஸ் பெற்றது FSSAI
Dahi: இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தனது உத்தரவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

ஆவின் தயிர், FSSAI லோகோ
இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI), தயிர் பாக்கெட்டுகளில், தயிர் என்பதை இந்தியில் தஹி என அச்சிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸும், ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் அச்சடிக்க கட்டாயப்படுத்துவதா? என்று கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தனது உத்தரவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறிய இந்த விவகாரத்துக்கு FSSAI தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.