Iphone 15 Fake Battery: பிளிப்கார்டில் ஐபோன் 15 ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
குடியரசு தின விழா சிறப்பு விற்பனையின்போது ஆர்டர் செய்து போலி பேட்டரியுடன் டெலிவரி செய்யப்பட்ட ஐபோன் 15ஐ மாற்றுவதற்கு பிளிப்கார் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்டில் குடியரசு தின விழா சிறப்பு விற்பனையான Flipkart Republic Day Sale நடைபெற்று வரும் இந்த நேரத்தி்ல் ப்ரீமியம் ஸ்மார்ட் போனாக இருந்து வரும் ஐபோன் 15 வாங்கியுள்ளார். இதையடுத்து தனக்கு டெலிவரி செய்யப்பட்ட ஐபோனில் போலி பேட்டரி இடம்பிடித்திருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம், விடியோக்களை பகிர்ந்திருக்கும் பாதிக்கப்பட்ட நபர், பிளிப்கார்ட் நிறுவனம் இந்த சாதனத்தை மாற்றி தருவதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பிளிப்கார்டில் ஐபோன் 15 போன் வாங்கி போலி பேட்டரியால் ஏமாற்றப்பட்ட நபர் தனது எக்ஸ் பக்கத்தில், " ஜனவரி 13ஆம் தேதி பிளிப்கார்டில் நான் ஆர்டர் செய்த ஐபோன் ஐனவரி 15இல் கிடடைத்தது. ஆனால் பிளிப்கார்ட் நிறுவனம் மோசடி செய்துவிட்டது.
எனக்கு டெலிவரி செய்யப்பட்ட போனில் போலியான பேட்டரி இடம்பிடித்துள்ளது. அத்துடன் போன் வந்த பாக்ஸ் பேக் செய்யப்பட்ட விதமாக போலியாக இருந்தது. தற்போது அவர்கள் போனை மாற்றி தருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுடன் அவர் பகிர்ந்திருக்கும புகைப்படத்தில், "உங்கள் ஐபோன் பேட்டரி உண்மையான ஆப்பிள் பாகமா என்பதை கண்டறிய முடியவில்லை. இந்த பாகம் உண்மையானது அல்ல அல்லது நிறுவி முடிந்த பின்னர் எதிர்பார்த்தபடி செயல்படாதது" என்ற தகவல் அவர் வாங்கியிருக்கும் ஐபோன் டிஸ்ப்ளேயில் தோன்றியுள்ளது.
மற்றொரு புகைப்படத்தில், Battery Health & Charging சோதித்து பார்த்தபோது, "இந்த ஐபோனில் உண்மையான ஆப்பிள் பேட்டரி உள்ளதா என்பதைச் சரிபார்க்க முடியவில்லை. இந்த பேட்டரியின் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் இல்லை" என போன் டிஸ்ப்ளேயில் இடம்பிடித்துள்ளது.
இதேபோல் மற்றொரு நபரும் ஐபோன் 15 பேட்டரி விவகாரத்தில் ஏமாற்றம் அடைந்திருக்கிறார். தனது எக்ஸ் பதிவில் அந்த நபர், " பிளிப்கார்டில் Republic Day Saleஇல் ஐபோன் 15 ஆர்டர் செய்தேன். எனக்கு டெலிவரி செய்யப்பட்ட போன் சார்ஜிங் ஆகவில்லை. இந்த பேட்டரி உண்மையானது அல்ல என காட்டுகிறது. இதற்கு தீர்வு தான் என்ன? என குறிப்பிட்டுள்ளார்
பிளிப்கார்ட் மட்டுமல்ல அமேசானாலும் இதுபோல் மோசடி நிகழ்வுகள் நடந்துள்ளன, சோனி ஹெட்போன்கள் ஆர்டர் செய்யப்பட்ட நபருக்கு கோல்கேட் டூத்பேஸ்ட் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதில் டெலிவரி பார்சலை பிரித்த விடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த அந்த நபர், அமோசன் பெயரை டேக் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் அமேசான் நிறுவனம் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதை உடனடியாக சரி செய்வதாகவும் கூறியுள்ளது.
இ-காமர்ஸ் இணையத்தளங்களில் குடியரசு தின விழா சிறப்பு சலுகை விற்பனையானது ஜோராக நடைபெற்று வருகிறது. பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் இணையத்தளங்களான அமேசான், பிளிப்கார்ட் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வழங்கியுள்ளன.
அதாவது, ஸ்மார்ட்போன்கள் உள்பட எலக்ட்ரிக் கேட்ஜெட்கள் தொடங்கி, ஹோம் அப்ளையன்சஸ், கிச்சன் பொருள்கள், ஆடைகள் என அனைத்து விதமாக பொருள்களில் சுமார் 50 சதவீத்துக்கும் மேல் தள்ளுபடி வழங்கியுள்ளன.
அந்த வகையில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பெரும்பலோனருக்கு விருப்ப போனாக இருந்து வரும் ஆப்பிள் ஐபோன்களிலும் தள்ளுபடியும், விலை குறைப்பும் அளிக்கப்பட்டுள்ளது. ஐபோன்களின் விலையானது ஆப்பிள் ஸ்டோர்களிலும், அதன் அதிகாரப்பூர்வ இணையத்தளங்களிலும் எந்த சலுகையும் இன்றி இருந்து வரும் நிலையில், இதுபோன்ற பண்டிகை கால விற்பனையாக ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நினைத்து கூட பார்க்க முடியாத அளவில் சலுகை, தள்ளுபடியுடன் கிடைக்கிறது.
இதனால் ப்ரீமியம் போனாக இருந்து வரும் ஐபோன் உள்ளிட்ட கேட்ஜெட்களை வாங்குவதற்கு பெரும் போட்டியே நிலவுகிறது.
டாபிக்ஸ்