தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime : சோகம்.. 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்பு.. இதுதான் காரணமாம்!

Crime : சோகம்.. 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்பு.. இதுதான் காரணமாம்!

Divya Sekar HT Tamil
Jan 29, 2024 08:07 AM IST

ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் வீட்டின் கதவுகள் வெளியில் இருந்து பூட்டப்பட்டிருந்தன.

ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து
ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து

ட்ரெண்டிங் செய்திகள்

ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் குடும்பத்தினர் எரிந்து இறந்திருக்கலாம் என்று முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்த போதிலும், வெளியில் இருந்து வீடு பூட்டப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பரேலி மூத்த போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி) குலே சுஷில் சந்திர பான் கூறுகையில், அஜய் குப்தா (35) மற்றும் அனிதா குப்தா (33) ஆகியோர் தங்கள் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் ஒரே அறையில் இறந்து கிடந்தனர். ஹீட்டரில் ஒன்றின் கம்பி எரிந்ததாக அவர் மேலும் கூறினார்.

தீ விபத்து ஏற்பட்டபோது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், சம்பவ இடத்தில் கொல்லப்பட்டதற்காக எந்த தடையுமும் கிடைக்கவில்லை. விபத்தில் இறந்தாக தான் தெரிகிறது. மற்றொரு போலீஸ் அதிகாரி மேலும் கூறினார். இறந்தவர்களின் ஆடைகள் அவர்களின் உடல்களில் ஒட்டியிருந்தன என்று அவர் கூறினார்.

"வீட்டின் பிரதான கதவை உள்ளே இருந்து பூட்டுவதற்கு தாழ்ப்பாள்கள் இல்லை என்பதை அக்கம்பக்கத்தினர் உறுதிப்படுத்தினர். குடும்பத்தினர் ஒரு தந்திரத்தைப் பயன்படுத்தி அதை வெளியில் இருந்து பூட்டுவது வழக்கம். பூட்டின் சாவி வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். சம்பவ இடத்தை ஆய்வு செய்ய தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்