PM Modi: ’நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் இந்த முறை வெளிநாட்டு தலையீடுகள் இல்லை!’ பிரதமர் மோடி கிண்டல்!
நம்முட்டைய நாடு ஒரு இளம் நாடு, இன்று 20-25 வயதுடையவர்கள் 50 வயதாகும் போது விக்சித் பாரத்தின் மிகப்பெரிய பயனாளிகளாக இருப்பார்கள். அவர்கள் கொள்கை வகுப்பதில் தலைமையில் இருப்பார்கள் என நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பிரதமர் மோடி பேட்டி

PM Modi: ’நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் இந்த முறை வெளிநாட்டு தலையீடுகள் இல்லை!’ பிரதமர் மோடி கிண்டல்! (@NarendraModi)
Budget 2025 session: கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதல்கள் ஏதுமின்றி நடைபெறும் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று குடியரசுத் தலைவர் உரை உடன் தொடங்குகிறது. நாளைய தினம் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2014ஆம் ஆண்டுக்கு பிறகு "வெளிநாட்டுத் தலையீடு இல்லாத முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இது" என்று கூறினார்.
