Budget 2025: பட்ஜெட் தினமான இன்று பங்குச்சந்தை சாதிக்குமா? சரியுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Budget 2025: மருந்து மற்றும் சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்கள், உள்கட்டமைப்பு, ஜவுளி, வங்கி மற்றும் நிதி போன்ற துறைகளில் பட்ஜெட் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Budget 2025: இந்திய பங்குச் சந்தை கடந்த சில வாரங்களாக சரிவை சந்தித்து வந்த நிலையில், நேற்றைய தினம் ஏற்றத்தில் முடிவடைந்து இருந்தது. வெள்ளிக்கிழமையான நேற்றைய தினத்தில் நிஃப்டி 50 1.11 சதவீதம் உயர்ந்து 23,508.40 புள்ளிகளில் நிறைவடைந்தது.
வரும் நிதியாண்டில் (FY26) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என்றும், பணவீக்கம் படிப்படியாக 4 சதவீதமாகக் குறையலாம் என்றும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
வரவிருக்கும் நிதியாண்டில் (FY26) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என்றும், உலகளாவிய நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும் பணவீக்கம் படிப்படியாக 4 சதவீதமாகக் குறையும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கை 2025 நம்பிக்கையை வெளிப்படுத்திய பின்னர், ஜனவரி 31, வெள்ளிக்கிழமை, நிஃப்டி 50 1.11 சதவீதம் உயர்ந்து 23,508.40 ஆக முடிவடைந்தது.