Budget 2025: நாடாளுமன்றம் வந்தடைந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! நடுத்தர மக்கள் வயிற்றில் பால் வார்பாரா?
Budget 2025: பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக ஜனாதிபதி திரௌபதி முர்மு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ருக்கு 'இனிப்பு கலந்த தயிரை' ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் பிற அதிகாரிகளுடன் நாடாளுமன்றம் வந்தடைந்தார்.
பட்ஜெட் கூட்டத் தொடர்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 13 ஆம் தேதி வரையும், பின்னர் மார்ச் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரையும் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம்
பட்ஜெட் தாக்களுக்கு முந்தைய அமைச்சரவை கூட்டம் பிரதமர் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சரவை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கும், அதன் பிறகு நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.
இனிப்பு கலந்த தயிரை ஊட்டிய ஜனாதிபதி
நிர்மலா சீதாராமன் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஆகியோர் மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்தனர். ஜனாதிபதி திரௌபதி முர்மு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ருக்கு 'இனிப்பு கலந்த தயிரை' ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.
நிதியமைச்சராக பொறுப்பேற்று நிர்மலா சீதாராமன் 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் உரையில் அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகள், வருவாய் மற்றும் செலவுத் திட்டங்கள், வரிவிதிப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பிற குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் இருக்கும்.
பொருளாதார ஆய்வறிக்கை சொல்வது என்ன?
இதற்கிடையில், நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், அடுத்த 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை வளரும் என்று கணித்துள்ளது.
யூனியன் பட்ஜெட்டுக்கு ஒரு நாள் முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட இந்த கணக்கெடுப்பு, நிலையான வெளி கணக்கு, நிதி ஒருங்கிணைப்பு மற்றும் தனியார் நுகர்வு ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் மூலதனப் பொருட்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் நீண்டகால தொழில்துறை வளர்ச்சியை வலுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த நடவடிக்கைகள் உற்பத்தித்திறன், புதுமை மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வலுவாக இருப்பதாகவும், வெளிநாட்டுக் கடனில் 90 சதவீதத்தை ஈடுகட்டுவதாகவும், பத்து மாதங்களுக்கும் மேலாக இறக்குமதித் தொகையை வழங்குவதாகவும் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
2024 ஜனவரியில் 616.7 பில்லியன் டாலர்களாக இருந்த கையிருப்பு, 2024 செப்டம்பரில் 704.9 பில்லியன் டாலராக உயர்ந்தது. ஜனவரி 3, 2025 நிலவரப்படி 634.6 பில்லியன் டாலராக உள்ளது.
வேலைவாய்ப்பு துறையில் நிகர ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சந்தாக்கள் 2019 நிதியாண்டில் 61 லட்சமாக இருந்தது. 24 நிதியாண்டில் 131 லட்சமாக உயர்ந்து உள்ளது.

தொடர்புடையை செய்திகள்