Tamil News  /  Nation And-world  /  Features Of New Parliament Building

New Parliament: 'புதிய நாடாளுமன்றக் கட்டத்தில் இன்று முதல் கூட்டம்…!’ இவ்வுளவு வசதிகளா?

Kathiravan V HT Tamil
Sep 19, 2023 06:10 AM IST

”புதிய நாடாளுமன்றக் கட்டட்ட வளாகம் "பிளாட்டினம்-மதிப்பீடு செய்யப்பட்ட பசுமைக் கட்டிடம்" என அங்கீகாரம் பெற்றுள்ளது”

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் புகைப்படங்கள்
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் புகைப்படங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகளை டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டது.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் சில முக்கிய அம்சங்கள் இதோ…!

  • புதியதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடம் பழைய கட்டடத்தை விட விஸ்தாரமான அறைகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • இந்தியாவின் தேசிய பறவையான மயிலை அடிப்படையாகக் கொண்டு, புதிய மக்களவை கட்டடம் 888 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
  • தேசிய மலரான தாமரை கருப்பொருளை அடிப்படையாக கொண்டு மாநிலங்களவை 348 இடங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 
  • இரண்டு அவைகளின் கூட்டுக்கூட்டத்தை நடத்தும் வகையில் 1,272 இருக்கைகளுடன் அரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த கட்டடத்தின் ஆயுட்காலம் 150 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட செங்கோல் ஆனது மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ளது.
  • மக்களவை, மாநிலங்களவையை தவிர புதிய நாடாளுமன்ற வளாகத்தின் மையத்தில் 'அரசியலமைப்பு மண்டபம்' என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
  • இது முந்தைய கட்டிடத்தைப் போலவே வெளிப்புறத்திலும் அலுவலகங்களைக் கொண்டிருக்கும்.
  • புதிய வளாகத்தில், அலுவலகங்கள் 'அதி-நவீன' பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சமீபத்திய தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் மற்றும் மிகவும் பாதுகாப்பானவையாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • விவாதங்களின் தரத்தை கூட்டும் வகையில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட நூலகத்தை புதிய நாடாளுமன்றம் கொண்டுள்ளது.
  • புதிய நாடாளுமன்றக் கட்டட்ட வளாகம் "பிளாட்டினம்-மதிப்பீடு செய்யப்பட்ட பசுமைக் கட்டிடம்" என்ற அங்கீகாரம் பெற்றுள்ளது.
  • நாட்டின் பல்வேறு கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்காக பல பிராந்திய கலைப்படைப்புகளையும் இது வழங்கும்.
  • நாடாளுமன்றக் கட்டடத்தின் திறந்த முற்றத்தில் தேசிய மரமான ஆலமரமும் உள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்