இனி ஒரே ஃபாஸ்ட் டேக் பாஸ் போதும்.. வருடம் முழுவதும் பயணிக்கலாம் - முழு விவரங்கள்
ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் நடவடிக்கை மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிறுத்த வேண்டிய தேவையை நீக்க உதவும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை தனியார் வாகனங்களுக்கான புதிய ஃபாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர பாஸ் திட்டத்தை வெளியிட்டார். இது ஆகஸ்ட் 15 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் ஆண்டு சுங்கச் செலவை ரூ.10 ஆயிரத்தில் இருந்து, ரூ.3 ஆயிரம் ஆக குறைப்பதன் மூலம் நெடுஞ்சாலை பயனர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் என்று நிதின் கட்கரி கூறினார்.
இந்த நடவடிக்கை வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிறுத்த வேண்டிய தேவையை நீக்க உதவும் என்றும், இதனால் போக்குவரத்து ஓட்டத்தை எளிதாக்கும் என்றும் பயண நேரத்தைக் குறைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
புதிய ஃபாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர பாஸ்
ஆண்டு ஃபாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர பாஸ் ஆகஸ்ட் 15, 2025 அன்று தொடங்கப்படும், இதன் விலை ரூ.3 ஆயிரம். இது செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்துக்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் 200 டோல் பிளாசா கிராசிங்குகளை வழங்குகிறது. "இது மக்கள் மிகப் பெரிய அளவில் பயணிக்க உதவும். வெறும் ரூ.3 ஆயிரம் உடன், பயணிகள் ஒரு வருடத்தில் 200 டோல் பிளாசாகளை கடக்க முடியும். முன்னதாக, இதற்கு சுமார் ரூ.10 ஆயிரம் செலவாகும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பயணத்துக்கு சராசரியாக ரூ.15 மட்டுமே செலவாகும் என்று அமைச்சர் கட்கரி கூறினார்