'கர்நாடகாவில் விலை வீழ்ச்சி அடைந்த முட்டைக்கோஸ்’: விவசாயிகள் பெலகாவி துணை ஆணையரிடம் மனு!
விவசாயிகள் ஒவ்வொரு முட்டைக்கோஸ் செடியினையும் பசுமை நாற்றங்காலில் இருந்து ரூ.6-க்கு வாங்குகிறார்கள், ஒவ்வொரு செடியும் அதிகபட்சமாக 2 கிலோ எடையுள்ள முட்டைக்கோஸை உற்பத்தி செய்கிறது.

கர்நாடக மாநிலத்தில் முட்டைக்கோஸின் விலை கடுமையாக சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் போதியவிலை கிடைக்காமல் அதை விளைநிலத்திலேயே விட்டுச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
வடக்கு கர்நாடகா பகுதியில் முட்டைக்கோஸின் விலை கிலோவுக்கு, ஒரு ரூபாய்க்கும் கீழே, அதாவது 60 பைசாவாகக் குறைந்தது. இதை அடுத்து, பெலகாவியைச் சேர்ந்த விவசாயிகள் குழு ஒன்று பெலகாவி துணை ஆணையரிடம் ஒரு மனுவை சமர்ப்பித்துள்ளதாக இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
"கடந்த ஆண்டு போதுமான மழை பெய்ததால், கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், முக்கியமாக பெலகாவி, கானாபூர் மற்றும் கோகாக் தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகள், அதிக அளவில் காய்கறிகளை பயிரிட்டனர். இது சந்தையில் விலை வீழ்ச்சிக்கு வழிவகுத்த காரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது" என்று கர்நாடக ராஜ்ய ராய்ரா சாந்தா மட்டு ஹசிரு சேனே என்னும் அமைப்பின் பெலகாவி தாலுகா தலைவர் அப்பாசாகேப் தேசாய் கூறினார்.