தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pm Modi : பிரபல எழுத்தாளர், ஒடிசா முதல்வரின் சகோதரி கீதா மேத்தா காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்!

PM Modi : பிரபல எழுத்தாளர், ஒடிசா முதல்வரின் சகோதரி கீதா மேத்தா காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்!

Divya Sekar HT Tamil
Sep 17, 2023 08:13 AM IST

பிரபல எழுத்தாளர், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரியுமான கீதா மேத்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கீதா மேத்தா காலமானார்
கீதா மேத்தா காலமானார்

பிரபல எழுத்தாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கின் சகோதரியுமான கீதா மேத்தா (80), நேற்று புதுடெல்லியில் காலமானார்.

 1943-ம் ஆண்டு டெல்லியில் பிறந்த கீதா மேத்தா, பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவா். பிரபல எழுத்தாளரான இவா், ஸ்னேக் அன்ட் லேடா்ஸ், ராஜ், அன்ட் லேடா்ஸ் தி எடா்னல் கணேசா உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளாா்.

கீதா மேத்தா ஆவணப்பட இயக்குநா், பத்திரிகையாளராகவும் செயல்பட்டவர். உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த இவா், டெல்லியில் உள்ள தனது வீட்டில் காலமானாா்.

இந்நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேத்தாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில், பிரபல எழுத்தாளர் ஸ்ரீமதி கீதா மேத்தா ஜி அவர்களின் மறைவு வருத்தம் அளிக்கிறது. 

ட்ரெண்டிங் செய்திகள்

எழுத்தாளா் கீதா மேத்தா பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையாக இருந்தாா்.அ வருடைய அறிவுத்திறன் மற்றும் எழுத்து மற்றும் திரைப்படத் தயாரிப்பின் மீதான ஆர்வத்திற்காக அறியப்பட்டார்.

அவர் இயற்கை மற்றும் நீர் பாதுகாப்பிலும் ஆர்வமாக இருந்தார். துக்கத்தின் இந்த நேரத்தில் எனது எண்ணங்கள் நவீன் பட்நாயக் மற்றும் முழு குடும்பத்துடன் உள்ளன. ஓம் சாந்தி" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.