’புதிய மக்களவையின் துணை சபாநாயகர் நானா?’ அயோத்தி எம்.பி அவதேஷ் பிரசாத் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு சிறப்பு பேட்டி
சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத், அயோத்தி மாவட்டத்தில் உள்ள பைசாபாத் மக்களவைத் தொகுதியில் இரண்டு முறை பாஜக எம்பியாக இருந்த லல்லு சிங்கை தோற்கடித்து அனைவரையும் திகைக்க வைத்தார்.
நாடாளுமன்ற மக்களவையின் துணை சபாநாயகர் பதவிக்கான போட்டியில் உள்ளீர்களா என்பது குறித்து சமாஜ்வாதி கட்சி நிர்வாகியும், அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியின் எம்.பியுமான அவதேஷ் பிரசாத் மனம் திறந்து உள்ளார்.
இந்துஸ்தான் டைம்ஸ் யூடியூப் சேனலுக்கு அயோத்தி மாவட்டத்தில் உள்ள பைசாபாத் தொகுதியின் எம்.பி அவதேஷ் பிரசாத் அளித்த நேர்காணல்:-
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், ராமர் கோயில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அவதேஷ் பிரசாத் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “அதைச் சுற்றி விவாதங்கள் நடந்தன. பிரதமர் மோடி அயோத்திக்கு சென்று ரோட் ஷோ நடத்தினார். எனது வேட்புமனுவைக் கேள்விப்பட்ட பாஜக தொண்டர்களுக்கு மன உறுதி குறைந்தது. நான் சாதி அரசியல் செய்யவில்லை. அனைத்து சாதி, சமூக மக்களும் என்னை மதிக்கிறார்கள். பிரதமர் போட்டியிடப் போகிறார் (தேர்தலில்) நான் எப்படி வெற்றி பெறுவேன் என்று பயந்துபோன பாஜக தலைவர்கள் சொல்லத் தொடங்கினர். என அவர் கூறினார்.
அயோத்தியில் பாஜக தோற்றது ஏன்?
உயர் பதவியில் இருந்து தான் நிறுத்தப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், "அகிலேஷ் யாதவ் என்னை பெரிய அளவில் கவுரவிக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். நீங்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று என்னிடம் கூறினார். நான் போட்டியிட்டால், என்னை எதிர்த்து பாஜக வேட்பாளர் யார் நின்றாலும் நான் வெற்றி பெறுவேன்" என்றார்.
ராமர் கோவிலின் பிரான பிரதிஷ்டை முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு பாஜக ஏன் தோல்வியடைந்தது என்று கேட்டதற்கு, "இது பாஜகவின் சிந்தனை மற்றும் சித்தாந்தத்தின் தோல்வி. அயோத்தி ராமரின் தேசம். விலை உயர்ந்த நிலங்கள் குறைந்த விலையில் அங்கு கையகப்படுத்தப்பட்டது என அவர் கூறினார்.
இந்தியாவின் பொதுமக்கள் கோபத்தை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் அவ்வப்போது தான் கோபத்தை மக்கள் வெளிப்படுத்துகின்றனர் என அவர் கூறினார்.
மக்களவை துணை சபாநாயகராகும் வாய்ப்பு குறித்து கேட்டதற்கு, பதில் அளித்த அவர் "கடவுள் என் மீது கருணை காட்டி உள்ளார். நான் ஒன்பது முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளேன். என் மனைவி பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ளார். ஆறு முறை அமைச்சராக இருந்துள்ளேன்.
துணை சபாநாயகர் ஆவது பற்றி எனக்கு தெரியாது இது குறித்து எனக்கு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என அவர் கூறினார்.
அகிலேஷ் யாதவை பிரதமராக்குவேன்
சமாஜ்வாடி கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே அக்கட்சியுடன் இணைந்திருந்த அவதேஷ் பிரசாத், கடந்த 45 ஆண்டுகளாக வேறு எந்த கட்சிக்கும் மாறியது இல்லை என கூறினார். முலாயம் சிங் யாதவால் பிரதமர் ஆக முடியவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்னர் அகிலேஷ்ஜியிடம் கூறினேன். நான் உங்களை பிரதமராக்குவேன் என சொன்னதாக அவர் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:-
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்