Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?
Fact Check: ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றியடையும் என்று டிஜிட்டல் செய்தி தளமான The News Minute கருத்து கணிப்பு கூறுவதாக போலி கிராஃபிக் வரைபடம் வைரலாகி வருகிறது.
Fact Check: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கான கருத்துக் கணிப்புகளின் தொகுப்பைக் காட்டும் டிஜிட்டல் இணையதளமான நியூஸ் மினிட்டின் லோகோ, செய்தி நிறுவனத்துடன் கூடிய கிராபிக்ஸ் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது.
கிராஃபிக் என்ன காட்டுகிறது?
இந்தியா டுடே – ஆக்சிஸ், சிஎன்என் நியூஸ் 18 -ஐபிஎஸ்ஓஎஸ், டைம்ஸ் நவ் -விஎம்ஆர், ரிபப்ளிக் – ஜான் கி பாத், ரிபப்ளிக் – சிவோட்டர், நியூஸ்எக்ஸ் – NEΤΑ மற்றும் டுடேஸ் சாணக்யா போன்ற பல நிறுவனங்களின் கணிப்புகள் அந்த கிராஃபிக் டிசைனில் பட்டியலிடப்பட்டுள்ளன. அனைத்து கருத்துக்கணிப்புகளின்படி, ஆந்திரப் பிரதேசத்தில் தற்போதைய ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை (YSRCP) விட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) முன்னிலை வகிப்பது போல் காட்டப்பட்டுள்ளது.
ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி
ஆந்திராவில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி (TDP), பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சி (JSP) ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளன.
இந்த செய்தி எழுதப்படும் போது, பொய்யாக பரப்பப்பட்ட பதிவு, 146.6K பார்வைகளைப் பதிவு செய்தது. இது மட்டுமல்லாது பலரும் இந்த போலி பதிவை ஷேர் செய்திருந்தனர். உதாரண பதிவுகள் 1, 2
உண்மை என்ன?
விசாரணை முடிவு : கிராபிக்ஸ் போலியானது.
2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பழைய கிராபிஸ் படம், ஆந்திராவின் தற்போதைய கருத்து கணிப்பு நிலவரமாக பொய்யாக பகிரப்படுவதாக நியூஸ் மினிட் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதே போல், சாணக்யா தரப்பிலும் தேர்தல் கருத்துக்கணிப்பு தொடர்பாக எந்த தகவலையும் தாங்கள் வெளியிடவில்லை எனவும், தற்போது பரப்பப்படும் கருத்துகணிப்பு போலியானது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
எப்படி கண்டுபிடித்தோம்?
கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் வாயிலாக ஆராய்ந்ததில், மே 15 முதல் தனது எக்ஸ் பக்கத்தில் தி நியூஸ் மினிட்டின் தலைமை செய்தி ஆசிரியர் தன்யா ராஜேந்திரனின் பதிவை பார்த்தோம்.
அவர் வைரலான கூற்றுகளில் ஒன்றை மறுபதிவு செய்து, “அன்புள்ள TDP மற்றும் YSRCP ஆதரவாளர்களே. கருத்துக்கணிப்பு முடிவுகள் எதுவும் வரவில்லை. இந்த கிராஃபிக் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை” என்று எழுதியிருந்தார்.
நியூஸ் மினிட்டின் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் கருத்துகணிப்பு கிராபிக்ஸ் கார்டை தாங்கள் பதிவிடவில்லை என்று கூறியுள்ளது. மேலும் 2019ஆம் ஆண்டு வெளியான செய்தியின் இந்த பழைய படம் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் குறித்து வெளியானது என்பதை தெளிவுபடுத்தவே இந்த பதிவு என்று நியூஸ் மினிட் கூறியுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், நாடு முழுவதும் எந்த ஒரு செய்தி நிறுவனமும், எக்சிட் போல் கணிப்புகளை வெளியிட முடியாது என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
மக்களவை மற்றும் நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவின் கடைசி நாளான ஜூன் 1ஆம் தேதி வரை எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளை வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ரிவர்ஸ் இமேஜ் தேடல் வாயிலாக ஆய்வு செய்ததில் 2019 ஆம் ஆண்டு வெளியான ஆந்திரப் பிரதேச தேர்தல் குறித்த The News Minute கருத்து கணிப்பு செய்தியை காண முடிந்தது.
அந்த 2019ஆம் ஆண்டு கருத்து கணிப்பில் பிற கட்சிகள் ஒரு தொகுதியோ அல்லது முற்றிலும் வெற்றி பெறாத நிலையோ ஏற்படும் என The News Minute செய்தி வெளியாகியிருந்தது.
மேலும், அரசியல் ஆய்வு அமைப்பான டுடேஸ் சாணக்யா அவர்களின் X பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டு, ஆந்திரப் பிரதேசத்திற்கான தவறான கருத்துக் கணிப்புகள் தங்கள் பெயரைப் பயன்படுத்தி பரப்பப்பட்டதாக அறிவித்தது.
முடிவு
ஆந்திராவில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று தி நியூஸ் மினிட்டில் கூறியுள்ளதாக ஒரு போலி கிராஃபிக் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு
இந்தச் செய்தி முதலில் News Mobile இணையதளத்தில் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்