தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Fact Check: என்னது.. இதுதான் பிரதமர் மோடியின் திருமண போட்டோவா.. வைரலாகி வரும் செய்தியின் உண்மைத்தன்மை என்ன?

Fact Check: என்னது.. இதுதான் பிரதமர் மோடியின் திருமண போட்டோவா.. வைரலாகி வரும் செய்தியின் உண்மைத்தன்மை என்ன?

News checker HT Tamil
May 16, 2024 12:36 PM IST

PM Modi wedding photo Fact Check: பிரதமர் மோடியின் திருமண படம் என்று புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடிய நியூஸ் செக்கர் குழு அது தவறான தகவல் என்பதை கண்டறிந்துள்ளது.

Fact Check: என்னது.. இதுதான் பிரதமர் மோடியின் திருமண போட்டோவா.. வைரலாகி வரும் செய்தியின் உண்மைத்தன்மை என்ன?
Fact Check: என்னது.. இதுதான் பிரதமர் மோடியின் திருமண போட்டோவா.. வைரலாகி வரும் செய்தியின் உண்மைத்தன்மை என்ன? (@im_inba1)

ட்ரெண்டிங் செய்திகள்

உண்மை: இது தவறானத் தகவலாகும். உண்மையில் அப்படம் குஜராத் முன்னாள் அமைச்சர் ஹேமந்த் சப்பத்வாலாவின் மகளின் திருமணத்தில் எடுக்கப்பட்டது என நியூஸ்செக்கர் தமிழ் மேற்கொண்ட ஆய்வில் தெரிவந்துள்ளது.

“திருமணத்தை மறைத்த திருடனின் திருமண போட்டோவை திருடியாச்சு.. ” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

பிரதமர் மோடியின் திருமண படம் என்று புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடிய நியூஸ் செக்கர் குழு அது தவறான தகவல் என்பதை கண்டறிந்துள்ளது.

இத்தேடலில் ஏபிவிபியின் தேசியச் செயலாளர் ஆஷிஷ் சௌகான் வைரலாகும் படம் மோடியின் திருமணப் படமல்ல என தெளிவுப்படுத்தி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்ததாக நியூஸ் செக்கர் தெரிவித்துள்ளது. வைரலாகும் படத்தில் பிரதமரின் அருகிலிப்பவர் குஜராத்தின் முன்னாள் அமைச்சர் ஹேமந்த் சப்பத்வாலாவின் மகள் என்று அவர் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து நியூஸ் செக்கர் குழு தேடுகையில் குஜராத் ஒபிசி அணியின் முன்னாள் தலைவரும், ஹேமந்த் சப்பத்வாலாவின் மகனுமான கேயூர் வைரலாகும் படம் 1994 ஆம் ஆண்டில் அவரது சகோதரி ஆல்பாவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்டது என்று தெளிவுப்படுத்தி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை நியூஸ் செக்கர் குழு கண்டறிந்தது.

முடிவுரை

பிரதமர் மோடியின் திருமண படம் என்று வைரலாகும் படம் உண்மையில் குஜராத் முன்னாள் அமைச்சர் ஹேமந்த் சப்பத்வாலாவின் மகளின் திருமணத்தில் எடுக்கப்பட்டதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தச் செய்தி முதலில் நியூஸ் செக்கர் தளத்தில் வெளியிடப்பட்டது, மேலும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக எச்.டி டிஜிட்டலால் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

முன்னதாக, மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புடைசூழ பிரதமர் மோடி அரசு அலுவலகத்திற்கு சென்று தனது ஆவணங்களை ஒப்படைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. பின்னர் அந்த அதிகாரி பெருந்தன்மையுடன் ஆவணங்களை ஏற்றுக்கொண்டு, பிரதமர் மோடிக்கு வணக்கம் தெரிவித்து, அவருக்கு இருக்கை வழங்குகிறார். குஜராத்தைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டார். இந்து மதத்தின் மிக முக்கியமான ஆன்மீக மையத்திலிருந்து அவர் களத்தில் இறங்குவது இது மூன்றாவது முறையாகும்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, பிரதமர் மோடி புனித கங்கை நதிக்கரையில் உள்ள சின்னமான தசாஸ்வமேத படித்துறையில் பிரார்த்தனை செய்தார். பழமையான கால பைரவ் கோயிலுக்கும் சென்றார்.

படித்துறையில் ஆரத்தி

தசாஸ்வமேத படித்துறையில் பிரதமர் மோடி ஆரத்தி நடத்தினார்.

படித்துறையில் வழிபட்ட பின்னர், பிரதமர் மோடி நமோ படித்துறைக்கு சொகுசு கப்பலில் சென்றார். பின்னர் அவர் புகழ்பெற்ற கோயிலை அடைந்தார், அங்கு அவர் வேத மந்திரங்களை உச்சரித்தபடி தெய்வத்தின் முன் பிரார்த்தனை செய்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்