Fact Check: மேற்கு வங்கத்தில் ரயில் நிலையத்தை அடித்து நொறுக்கிய முஸ்லிம்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Fact Check: மேற்கு வங்கத்தில் ரயில் நிலையத்தை அடித்து நொறுக்கிய முஸ்லிம்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check: மேற்கு வங்கத்தில் ரயில் நிலையத்தை அடித்து நொறுக்கிய முஸ்லிம்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Crescendo HT Tamil
Jul 31, 2024 05:00 PM IST

‘’உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரோஹிங்கியா முஸ்லிம்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு Tamil Fact crescendo ஆய்வு செய்தது.

Fact Check: மேற்கு வங்கத்தில் ரயில் நிலையத்தை அடித்து நொறுக்கிய முஸ்லிம்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check: மேற்கு வங்கத்தில் ரயில் நிலையத்தை அடித்து நொறுக்கிய முஸ்லிம்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரோஹிங்கியா முஸ்லிம்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு Tamil Fact crescendo ஆய்வு செய்தது.

இதனை வாசகர்கள்  வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ ரயில் வந்து நூறு வருடங்கள் ஆகிறது.

ஆனால் இந்த நிலையத்தை பள்ளிவாசல் அருகில் இருந்து மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள மகிஷாஷூர் ரயில் நிலையம், ரயில் விசில் சத்தம் அவர்களின் பிரார்த்தனைக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அழிக்கப்பட்டது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இது உண்மையா?

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேற்கண்ட பதிவில் கூறியுள்ளது போன்று, இது மேற்கு வங்க மாநிலம், Naopara Mahishasur ரயில் நிலையத்தில் தற்போது நடைபெற்ற வன்முறை சம்பவமா என்று தகவல் தேடினோம்.

அப்போது, ரயில் சத்தம் பொறுக்காமல் யாரும் அந்த ரயில் நிலையத்தை சூறையாடவில்லை என்றும், இது கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் தொடர்பானது என்றும் தெரியவந்தது.

உண்மை இதுதான்

இந்த வீடியோவில் மேற்கண்ட ரயில் நிலையத்தை சூறையாடும் பொதுமக்கள் கூட்டம் NRC மற்றும் மோடிக்கு எதிராகக் கோஷமிடுவதை கேட்க முடிகிறது. இதே வீடியோவின் மற்றொரு பகுதி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

எனவே, 2019ம் ஆண்டு நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வீடியோவை எடுத்து, முஸ்லீம் ஜிகாதிகள் வேண்டுமென்றே மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தை அடித்து நொறுக்குவதாகக் கூறி தவறான தகவல் பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை Tamil Fact Crescendo வெளியிடும்.

இதையும் படிங்க: Fact Check: திமுக ஆட்சியில் குடித்துவிட்டு நடனமாடும் நபர் என்று பரவும் வீடியோ.. இது உண்மையா?

பொறுப்புத் துறப்பு

இந்தச் செய்தி முதலில் News checker Tamil-இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டங்கள், CAA எதிர்ப்பு, CAB எதிர்ப்பு அல்லது CAA மற்றும் NRC எதிர்ப்புகள் என்றும் அழைக்கப்படும், குடியுரிமை திருத்தச் சட்டம் 12 டிசம்பர் 2019 அன்று இந்திய அரசால் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்தது.

போராட்டங்கள் முதலில் அசாமில் தொடங்கி டெல்லி, மேகாலயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுரா போன்ற பிற மாநிலங்களில் 4 டிசம்பர் 2019 அன்று வேகமாகப் பரவியது. எதிர்ப்பாளர்களின் கவலைகள் வேறுபட்டாலும், நாடு முழுவதும் போராட்டங்கள் வேகமாக வெடித்தன.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.