தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  National Statistics Day 2024: ’ஐ.நாவை அதிரவிட்ட புள்ளிவிவர புலி!’ தேசிய புள்ளியியல் தின வரலாறு இதோ!

National Statistics Day 2024: ’ஐ.நாவை அதிரவிட்ட புள்ளிவிவர புலி!’ தேசிய புள்ளியியல் தின வரலாறு இதோ!

Kathiravan V HT Tamil
Jun 29, 2024 06:00 AM IST

National Statistics Day 2024: இந்த ஆண்டு தேசிய புள்ளியியல் தினத்தின் கருப்பொருளாக தரவுகளின் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும் (Use of data for decision making) என்பதை அடிப்படையாக கொண்டு உள்ளது.

National Statistics Day 2024: ’ஐ.நாவை அதிரவிட்ட புள்ளிவிவர புலி!’ தேசிய புள்ளியியல் தின வரலாறு இதோ!
National Statistics Day 2024: ’ஐ.நாவை அதிரவிட்ட புள்ளிவிவர புலி!’ தேசிய புள்ளியியல் தின வரலாறு இதோ!

புள்ளியியல் மற்றும் பொருளாதார திட்டமிடல் துறைகளில் பேராசிரியர் பிரசாந்த சந்திர மஹாலனோபிஸ் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 29ஆம் தேதி அன்று தேசிய புள்ளியியல் தினம் கொண்டாடப்படுகிறது.

புள்ளியியலின் தந்தை 

'இந்திய புள்ளியியலின் தந்தை' என்று அழைக்கப்படும் மஹலானோபிஸ் ஜூன் 29, 1893 அன்று மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பிறந்தார்.

தேசிய புள்ளிவிவர அமைப்பை நிறுவுவதில் மஹலோனோபிஸின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக ஜூன் 29 தேசிய அளவில் கொண்டாடப்பட வேண்டிய சிறப்பு நாட்களில் ஒன்றாக ஜூன் 29, 2007 ஆம் ஆண்டு முதல் தேசிய புள்ளியியல் தினம் கொண்டாடப்படுகின்றது.  

புள்ளியியல் குறித்து உலகத்தரத்தில் ஆராய்ச்சி 

பல பரிமாணங்களில் அளவீடுகளின் அடிப்படையில், ஒரு புள்ளிக்கும் பரவலுக்கும் இடையிலான தூரத்தைக் கண்டறிய சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது. இது கிளஸ்டர் பகுப்பாய்வு மற்றும் வகைப்பாடு துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

பல தசாப்தங்களாக அயராத முயற்சி மற்றும் தலைமைத்துவத்தின் மூலம், மஹாலனோபிஸ் இந்தியாவில் வலுவான புள்ளிவிவர கலாச்சாரத்தை உருவாக்கினார். புள்ளிவிவரக் கோட்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து உலகத் தரத்தில் ஆராய்ச்சி செய்தார். 

இந்திய புள்ளியியல் நிறுவனத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்

புள்ளியியல் சார்ந்து சிறப்பாக செயல்படும் இளம் விஞ்ஞானிகளைக் கண்டறிந்து வளர்த்தார், இந்திய புள்ளியியல் நிறுவனத்தை (ISI) நிறுவினார். புள்ளியியல் சார்ந்த இதழ் மற்றும் பல்வேறு கூட்டங்கள், மாநாடுகளை நடத்துதல், நாடு முழுவதும் புள்ளியியல் பயிற்சிகளை அளித்தல், அரசின் பல்வேறு கொள்கை முடிவுகளில் புள்ளிவிவரங்களின் பயன்பாடுகளுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பங்களிப்புகளுக்காக அவர் தனித்துவம் பெற்று நிற்கிறார். 

அரசை இயக்குவதில் மஹாலனோபிஸின் பங்களிப்பு 

பேராசிரியர் மஹாலனோபிஸின் பங்களிப்பு சுதந்திர இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களை சீராக ஒருங்கிணைக்க பல்வேறு தேசிய, மாநில மற்றும் மாவட்ட அலுவலகங்களை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும், இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்கியதில் இவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

புள்ளியியலின் முக்கியத்துவம்

1950ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற அகில இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் ‘புள்ளி விவரங்கள் ஏன்?’ என்ற தலைப்பில் பேராசிரியர் மஹாலனோபிஸ் ஆற்றிய விரிவுரை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

புள்ளியியல் பொருளாதாரத் திட்டங்களையும், கொள்கைகளையும் உருவாக்க உதவுகிறது. இது உண்மைகளை ஒரு துல்லியமான மற்றும் உறுதியான வடிவத்தில் முன்வைக்கிறது. புள்ளியியல் சுகாதாரத் துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் சமூக கணக்கெடுப்புகளை நடத்த உதவுகிறது. இது கணிதத்தின் இன்றியமையாத பகுதியாகும்.

'இந்திய புள்ளிவிவரங்களின் தந்தை' என்று குறிப்பிடப்படும் பேராசிரியர் மஹாலனோபிஸ், மஹாலனோபிஸ், இந்தியாவின் முதல் திட்டக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகவும் தனது அயராத பங்களிப்பை தேசத்திற்காக அளித்தார். 

1972ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி அவர் மறைந்தார். “சமூக புள்ளியியல் சார்ந்து மாஹாலனோபிஸ் மேற்கொண்ட முன்னோடி முயற்சிகள், வளரும் நாடுகளின் புள்ளியியல் தேவை, புள்ளியியல் வளர்ச்சிக்கு அவர் அளித்த சிறந்த ஊக்கம் ஆகியவற்றை உலகம் முழுவதும் நினைவுக்கூறப்பட வேண்டும்” என்று ஐ.நா புள்ளியியல் ஆணையம் அவரது மரணம் குறித்த இரங்கல் குறிப்பில் தெரிவித்து இருந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v