
Erode Bypoll And Delhi Election Live: ‘தலைநகர் டெல்லி முதல் ஈரோடு கிழக்கு வரை’ வாக்குப் பதிவு அப்டேட் இதோ!
தலைநகர் டெல்லியில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ஈரோடு கிழக்கில் அதிக வாக்குகளை அள்ளப் போவது யார்? இன்று நடைபெறும் வாக்குப்பதிவு நிலவரம், உடனுக்குடன் இங்கு காணலாம்.
Wed, 05 Feb 202512:49 PM IST
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
Delhi Election 2025: டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
Wed, 05 Feb 202512:47 PM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
Erode East Bypoll 2025: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 64.02 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
Wed, 05 Feb 202512:17 PM IST
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: மாலை 5 மணி நிலவரம்
Delhi Election 2025: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது.
Wed, 05 Feb 202511:33 AM IST
வாக்குச் சாவடி முகவரை சிறைபிடித்து வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு
Delhi Election 2025: டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் முதல்வரும் கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் புது தில்லி தொகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை எழுப்பியது. தங்களது வாக்குச் சாவடி முகவரை சிறைபிடித்து வைத்திருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
Wed, 05 Feb 202511:05 AM IST
போலியாக வாக்களித்ததாக எழுந்த குற்றச்சாட்டு - இருவர் கைது
Delhi Election 2025: டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போலியாக வாக்களித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
Wed, 05 Feb 202510:27 AM IST
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்
Delhi Election 2025: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 46.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது.
Wed, 05 Feb 202510:26 AM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; மாலை 3 மணி நிலவரம்
Erode East Bypoll 2025: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 53.63% வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 9 மணி நிலவரப்படி 10.95 % வாக்குகளும் காலை 11 மணி நிலவரப்படி 26 சதவீத வாக்குகளும் பதிவானது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலில் மொத்தம் 2,27,546 பேர் வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.
Wed, 05 Feb 202510:12 AM IST
வாக்குப்பதிவு நிறுத்தம்
Erode East Bypoll 2025: ஈரோடு கிழக்கு தொகுதியின் 135வது வாக்குச்சாவடியில் விவிபேட் இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
Wed, 05 Feb 202510:09 AM IST
வாக்காளரை கட்டாயப்படுத்தியதாக புகார்
Delhi Election 2025: டெல்லி ஷகுர் பஸ்தியில் உள்ள சைனிக் விஹார் வாக்குச்சாவடியில் வாக்காளர்களை வற்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை வடக்கு டெல்லி மாவட்ட தேர்தல் அலுவலகம் (DEO) நிராகரித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆதரிக்க ஒரு வாக்காளரை ஒரு போலீஸ் அதிகாரி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wed, 05 Feb 202509:34 AM IST
பெண் வாக்காளர் பரபரப்பு புகார்
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தன்னுடைய வாக்கை வேறொருவர் செலுத்தியதாக பரிதா பேகம் என்ற பெண் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Wed, 05 Feb 202508:47 AM IST
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: பகல் 1 மணி நிலவரம்
Delhi Election 2025: டெல்லியில் மதியம் 1 மணி வரை 33.31 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி இன்று மாலை 6 மணிக்கு முடிவடையும்.
Wed, 05 Feb 202508:14 AM IST
ஆம்ஆத்மி - காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்
Delhi Election 2025: டெல்லி ஜாகிர் உசேன் கல்லூரி அருகே ஆம் ஆத்மி கட்சியினரும் காங்கிரஸ் தொண்டர்களும் மோதிக்கொண்டதை அடுத்து, கூட்டத்தை கலைக்க டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டன.
Wed, 05 Feb 202508:11 AM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பகல் 1 மணி நிலவரம்
Erode East Bypoll 2025: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பகல் 1 மணி நிலவரப்டி 42.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
Wed, 05 Feb 202507:31 AM IST
பாஜக எம்பி மனோஜ் திவாரி பேட்டி
Delhi Election 2025: பாஜக எம்பி மனோஜ் திவாரி, ஆம் ஆத்மி கட்சி டெல்லியைக் கொள்ளையடிப்பதாகக் குற்றம் சாட்டி, மக்கள் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "டெல்லியை ஆம்ஆத்மி கட்சியினர் நோய்வாய்ப்படுத்தினர். டெல்லியைக் கொள்ளையடித்தனர். இப்போது நாங்கள் வேலை செய்வோம். இப்போது டெல்லி எங்களுக்கு வாய்ப்பளிக்கப் போகிறது. நாங்கள் பணத்தை விநியோகிக்கவில்லை. நாங்கள் மதுபானங்களை விநியோகிக்கவில்லை. டெல்லி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து முடிந்தவரை வாக்களிக்க வேண்டும்" என்றார்.
Wed, 05 Feb 202507:09 AM IST
பாஜக தேசிய தலைவர் வருகை
Delhi Election 2025: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோருடன் வாக்களித்த பிறகு டெல்லி பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
Wed, 05 Feb 202507:03 AM IST
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: காலை 11 மணி நிலவரம்
Delhi Election 2025: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 19.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Wed, 05 Feb 202506:58 AM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 11 மணி நிலவரம்
Erode East Bypoll 2025: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காலை 11 மணி நிலவரப்டி 26.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
Wed, 05 Feb 202506:24 AM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குச்சாவடி எண் 3-ல் வாக்குப்பதிவு நிறுத்தம்
Erode East Bypoll 2025: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி எண் 3-ல் வாக்குப்பதிவு நிறுத்தபட்டுள்ளது. பி.பெ.அக்ரஹாரம் அரசு இசைப்பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தபட்டுள்ளது.
Wed, 05 Feb 202506:14 AM IST
மரக்கன்றுகள் பரிசு
Delhi Election 2025: வடக்கு அவென்யூவில் உள்ள CPWD சேவை மையத்தில் 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக வாக்களித்த துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் அவரது மனைவி சுதேஷ் தன்கர் ஆகியோருக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.
Wed, 05 Feb 202506:07 AM IST
வாக்கு செலுத்திய ஈரோடு ஆட்சியர்
Erode East Bypoll 2025: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அம்மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஜனநாயக கடமையாற்றினார்.
Wed, 05 Feb 202505:46 AM IST
ஜனநாயக கடமையாற்றிய முதன்மைச் செயலாளர்
Delhi Election 2025: பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா மற்றும் அவரது மனைவி தீன் மூர்த்தி மார்க்கில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.
Wed, 05 Feb 202505:15 AM IST
அஜய் மக்கான் பேட்டி
Delhi Election 2025: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜய் மக்கான் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில் டெல்லியில் எந்த வளர்ச்சியும் காணப்படவில்லை என்று கூறினார். “நான் வாக்களித்துள்ளேன், மேலும் அனைத்து வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விறுவிறுப்பான வாக்களிப்பு நடந்து வருகிறது. டெல்லி மக்கள் காங்கிரஸ் நாட்களை நினைவு கூர்கிறார்கள். டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளில் பழி சுமத்தும் விளையாட்டு மட்டுமே உள்ளது, எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை” என்று மக்கான் கூறினார்.
Wed, 05 Feb 202504:49 AM IST
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 8.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Wed, 05 Feb 202504:17 AM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.85 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
Wed, 05 Feb 202503:31 AM IST
வாக்களித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி!
Delhi Election : டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வாக்களித்தார்.
Wed, 05 Feb 202503:05 AM IST
திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்!
Erode Bypoll : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் குடும்பத்தினருடன் வந்து திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் வாக்கு செலுத்தினார். திராவிட மாடல் அரசின் 4ம் ஆண்டு சாதனைகளே திமுகவின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் என திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் பேட்டியில் கூறியுள்ளார்.
Wed, 05 Feb 202502:33 AM IST
இவர்களுக்கு இடையேதான் அதிக போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!
Erode Bypoll : இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி ஆகியோருக்கு இடையேதான் அதிக போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Wed, 05 Feb 202502:12 AM IST
699 பேர் போட்டி களத்தில் உள்ளனர்!
Delhi Election : 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டி களத்தில் உள்ளனர். டெல்லியின் முதல்வர் அதிஷி கல்காஜி தொகுதியிலும், முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
Wed, 05 Feb 202501:56 AM IST
ஈரோடு கிழக்குதொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!
Erode Bypoll : ஈரோடு கிழக்குதொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
Wed, 05 Feb 202501:49 AM IST
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்!
Delhi Election : டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் 70 சட்டசபை தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
Wed, 05 Feb 202501:47 AM IST
2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்!
Erode Bypoll : ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 636 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 760 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலினத்தவர்களும் என 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.
Wed, 05 Feb 202501:32 AM IST
சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்குப்பதிவு!
Erode Bypoll : ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சற்று நேரத்தில் தொடங்குகிறது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு 33 வார்டுகள் உள்ளன. இந்த 33 வார்டுகளில் 53 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Tue, 04 Feb 202501:56 PM IST
பெரியார் தாக்கு.. நாம் தமிழருக்கு என்ன தரும்?
Erode Bypoll And Delhi Election Live: ஈரோடு கிழக்கு தேர்தலில் பெரியார் குறித்து கடுமையான விமர்சனத்தை வைத்த நாம் தமிழர் கட்சி, இந்த முறை என்ன ஓட்டு வாங்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது
Tue, 04 Feb 202501:54 PM IST
திமுக செல்வாக்கு உயருமா?
Erode Bypoll And Delhi Election Live: ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், முழு பலத்துடன் திமுக போட்டியிடுகிறது. பிரதான கட்சியாக நாம் தமிழர் கட்சி மட்டும் திமுகவை எதிர்த்து களத்தில் நிற்கிறது
Tue, 04 Feb 202501:53 PM IST
இந்தியா கூட்டணி விரிசல்
Erode Bypoll And Delhi Election Live: நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி என்கிற பெயரில் கூடியிருந்த எதிர்கட்சிகள், டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை உதறின. ஆம் ஆத்மி கட்சிக்கு இந்திய கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. காங்கிரஸ் தனித்தும், பாஜக தனித்தும் களம் காண்கிறது.
Tue, 04 Feb 202501:52 PM IST
இன்று டெல்லியில் வாக்குப் பதிவு
Erode Bypoll And Delhi Election Live: ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மூன்று அணிகளாக தேர்தலை எதிர்கொள்ளும் டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது