அஸ்ஸாமில் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் - 8 பேர் உயிரிழப்பு!
அஸ்ஸாமில் பரவி வரும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் மலேரியா பரவி பலர் உயிரிழக்கும் நிலை இருந்து வருகிறது. குறிப்பாக, மழைக்கால வெள்ளப் பருவத்தில் வேகமாக பரவும் இந்த காய்ச்சல் மே மாதத்தில் தொடங்கி அக்டோர் மாதம் வரையில் நீடிக்கிறது.
ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாமில் கடந்த 9 நாட்களில் மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார இயக்கம் தெரிவித்துள்ளது .
இதுகுறித்து அஸ்ஸாம் மாநில சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் அவினாஷ் ஜோஷி, தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனர் டாக்டர் எம்.எஸ்.லட்சுமி பிரியா ஆகியோர் நேற்று மாவட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
அதில், நிலைமையை சமாளிக்க வரும் 16ஆம் தேதிக்குள் மாவட்ட விரைவுப் பதில் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

டாபிக்ஸ்