Enforcement Directorate: மணல் குவாரி மோசடி: ரூ.130 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை
மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு மாவட்டங்களில் மணல் குவாரிகளை கடந்த சில மாதங்களாக அமலாக்கத்துறை ஆய்வு செய்தது.
இந்த சோதனைகளின் அடிப்படையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும்; அதன் அடிப்படையில் மணல் குவாரிகள் தொடர்பாக பன்னீர்செல்வம் கரிகாலன் மற்றும் பிறருக்குச் சொந்தமான 35 வங்கிகளில் இருந்து ரூ. 2 கோடியே 25 லட்சம் தொடர்பான பணம் முடக்கப்பட்டுள்ளதாக, அதேபோல் அசையும் சொத்துகள் மற்றும் அசையாச் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சமீபத்தில் நடந்த சோதனையின் அடிப்படையில் தோராயமாக ரூ. 130 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு விவகாரங்களில் முறைகேடு நடைபெற்றதுள்ளதால், சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் இந்த சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் சோதனையின் முடிவுகளின் அடிப்படையில் மீண்டும் இதுதொடர்பான சோதனை நடக்கலாம் எனவும் அமலாக்கத்துறை தெரியப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ''சட்டவிரோத மணல் குவாரிகளில் பயன்படுத்தப்பட்ட 209 மணல் அள்ளும் கருவிகள் உட்பட ஏறத்தாழ ரூ.128.34 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள் உட்பட சுமார் ரூ.130.60 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்க இயக்குநரகம் தற்காலிகமாகப் பறிமுதல் செய்துள்ளது.
கூடுதலாக, சட்டவிரோத மணல் குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களான சண்முகம் ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர்செல்வம் கரிகாலன் உள்ளிட்டவர்களின் ரூ.2.25 கோடி பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பது பணமோசடி தடுப்புச் சட்டவிதிகளின்படி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்