தேசிய கல்விக் கொள்கை : கேள்வி எழுப்பிய திமுக எம்.பி., தமிழச்சி.. பட்டாசாய் வெடித்த தர்மேந்திர பிரதான்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  தேசிய கல்விக் கொள்கை : கேள்வி எழுப்பிய திமுக எம்.பி., தமிழச்சி.. பட்டாசாய் வெடித்த தர்மேந்திர பிரதான்!

தேசிய கல்விக் கொள்கை : கேள்வி எழுப்பிய திமுக எம்.பி., தமிழச்சி.. பட்டாசாய் வெடித்த தர்மேந்திர பிரதான்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Mar 10, 2025 11:46 AM IST

தேசிய கல்விக் கொள்கை : ‘அவர்கள் எந்த தேதியில் என்னை சந்தித்தார்கள் என்று என்னால் கூற முடியும். மார்ச் 15 ம் தேதி அவர்கள் என்னை சந்தித்தார்கள். அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? அவர்களின் முதலமைச்சர் இதை ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தார்’

புதிய கல்விக் கொள்கை : கேள்வி எழுப்பிய திமுக எம்.பி., தமிழச்சி.. பட்டாசாய் வெடித்த தர்மேந்திர பிரதான்!
புதிய கல்விக் கொள்கை : கேள்வி எழுப்பிய திமுக எம்.பி., தமிழச்சி.. பட்டாசாய் வெடித்த தர்மேந்திர பிரதான்!

தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுப்பிய கேள்வி

திமுக எம்.பி., தமிழகச்சி தங்கப்பாண்டியன், கேள்வி எழுப்பிய பேசியதாவது: ‘‘2000 கோடி என்பது பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டது. பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்திற்கு அந்த நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கவலை தெரிவித்திருக்கிறார். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. கல்விக்காக ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை தராமல் இருப்பது, சரியா? இது பழிவாங்கும் நடவடிக்கை. மாநில மாணவர்களை பாதிக்கிறது. கொள்கையை நிராகரிப்பதனால், ஒரு மாநிலத்திற்கான நிதி மறுக்கப்படுமா? எனக்கு அது பற்றி விளக்கம் வேண்டும்,’’

என்று தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பினர்

பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

திமுக எம்.பி.,யின் கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார். ‘‘இன்று மார்ச் 10 ம் தேதி. இன்னும் 20 நாட்கள் இருக்கிறது, இந்த நிதிஆண்டு நிறைவு பெற. அரசு என்பது தெளிவாக உள்ளது.  தமிழ்நாடு அரசுடன் கடந்த காலங்களில் நாங்கள் விவாதங்களை நடத்தியிருக்கிறோம். அவர்கள் ஒரு காலகட்டத்தில், தங்கள் நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு, பிஎம்ஸ்ரீ தொடர்பானபுரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்திய அரசுடன் கையெழுத்திட தயாராக இருந்தது. திமுக எம்.பி.,கள் என்னை சந்திக்க வந்தார்கள். இந்த கேள்வியை எழுப்பிய எம்.பி.,யும் என்னை சந்திக்க வந்தவர்களில் ஒருவர். தமிழக கல்வித்துறை அமைச்சருடன் வந்து அவர்கள் என்னை சந்தித்தார்கள். 

என்னிடம் ஏற்பதாக அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். அதன் பின் சென்றார்கள், இப்போது பிரச்னை எழுப்புகிறார்கள். அவர்கள் மீண்டும் எங்களுடன் பேசலாம். நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம். அவைத் தலைவர் அவர்களே, பாஜக ஆளாத மாநிலங்கள், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் தேசிய கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

திமுக நாகரீகமாக செயல்படவில்லை

திமுகவினர் நேர்மையற்று இருக்கிறார்கள். அவர்கள் நேர்மையோடு இல்லை. அவர்கள் உறுதிமொழி கொடுத்தார்கள். அவர்கள் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் விசயத்தை செய்திருக்கிறார்கள். மொழியை வைத்துக் கொண்டு விளையாட்டு செய்கிறார்கள். வீணான குற்றச்சாட்டை இந்திய அரசின் மீது வைக்கிறார்கள். அவர்கள் நீதியை நிலைநாட்டவில்லை. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்க வைக்கிறார்கள். அவர்கள் ஜனநாயகமற்று இருக்கிறார்கள், நாகரீகமாக செயல்படவில்லை.

அவர்கள் எந்த தேதியில் என்னை சந்தித்தார்கள் என்று என்னால் கூற முடியும். மார்ச் 15 ம் தேதி அவர்கள் என்னை சந்தித்தார்கள். அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? அவர்களின் முதலமைச்சர் இதை ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தார். அவருடைய சகோதரி கனிமொழி இங்கு இருக்கிறார். தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை அவர் உறுதி செய்ய வேண்டும்.  ஜனநாயகத்தின் மீது கறை படிகிற வகையில் திமுக செயல்படுகிறது. திமுக அரசியல் செய்து கொண்டிருக்கிறது,’’ என்று அப்போது தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.

அமைச்சரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இருப்பினும் ஆவேசத்துடன் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு பதிலளித்தார். அமைச்சரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர். 

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தின் தலைமை ஆசிரியராக உள்ளார். 23 ஆண்டுகளுக்கு மேல் அச்சு ஊடகம், காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய தேர்ந்த அனுபவம் மிக்கவர். இணையத்தின் முழு செயல்பாட்டை கண்காணிப்பதுடன், அனைத்து துறைகள் சார்ந்த கட்டுரைகளையும் எழுதுகிறார். மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் பட்டம் முடித்துள்ள இவர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர். தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு நிறுவனங்களைத் தொடர்ந்து 2022ல் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். திரைக்கதை எழுதுவது, இசை கேட்பது இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.