ECIL-ல் பணி: 1100 ஜூனியர் டெக்னீசியன்கள் தேவை; விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 16
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ecil-ல் பணி: 1100 ஜூனியர் டெக்னீசியன்கள் தேவை; விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 16

ECIL-ல் பணி: 1100 ஜூனியர் டெக்னீசியன்கள் தேவை; விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 16

Marimuthu M HT Tamil
Jan 12, 2024 05:44 PM IST

ஒப்பந்த அடிப்படையில் ஜூனியர் டெக்னிஷியன் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க வரும் ஜனவரி 16ஆம் தேதி கடைசி நாளாகும்.

ECIL-ல் பணி: 1100 ஜூனியர் டெக்னீசியன்கள் தேவை; விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 16
ECIL-ல் பணி: 1100 ஜூனியர் டெக்னீசியன்கள் தேவை; விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 16

Direct link to apply

ECIL 2024 காலியிட விவரங்கள்: ஒப்பந்த (கிரேடு II) பதவிகளில் 1100 ஜூனியர் டெக்னீஷியன்களை நிரப்ப இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் அதிகபட்சமாக 30வயதைத் தாண்டி இருக்கக் கூடாது. 

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்/எலக்ட்ரீசியன்/ஃபிட்டர் ஆகிய துறைகளில் ஐடிஐ (2 ஆண்டுகள்) தேர்ச்சியும் ஓராண்டு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்; தவிர, குறைந்தபட்சம் ஒரு வருடம் பொதுத்துறை மின்னணு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  

தேர்வு செயல்முறை: ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் வழங்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாக பட்டியலிடப்பட்டு ஆவணச் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதன்பின், தகுதி மற்றும் திறமையில் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

சம்பளம் - மாதத்திற்கு 22, 528 ரூபாய்

பணிக்காலம் - 4 மாதம் ஒப்பந்தம்(தேவைப்பட்டால் பணியின் அடிப்படையில் நீட்டிக்கப்படும்)

எப்படி விண்ணப்பிப்பது?

  • www.ecil.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.
  • முகப்புப் பக்கத்தில், தொழில் தாவலைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து, "JTC (Grade-II) பதவிகளுக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • ஒரு புதிய பக்கம் திரையில் காட்டப்படும்.
  • விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
  • தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்.
  • படிவத்தை சமர்ப்பித்து, எதிர்காலத்தேவைக்காக அதைப் பிரிண்ட் எடுத்துவைத்துக்கொள்ளவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.