போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்.. தொடரும் தாக்குதல்! பாக்., பிரதமர் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்.. தொடரும் தாக்குதல்! பாக்., பிரதமர் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்.. தொடரும் தாக்குதல்! பாக்., பிரதமர் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!

Kalyani Pandiyan S HT Tamil
Published May 10, 2025 10:18 PM IST

இந்தியாவுக்கு எதிரான அனைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களுக்குள்ளாகவேபாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்.. தொடரும் தாக்குதல்! - காரணம் என்ன?
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்.. தொடரும் தாக்குதல்! - காரணம் என்ன? (PTI)

மீண்டும் தாக்குதல்

பாகிஸ்தான் காஷ்மீர் ஸ்ரீ நகரில் மீண்டும் தாக்குதல் தொடுத்த நிலையில் அங்கு சைரன்கள் ஒலிக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. உதம்பூர் பகுதி மீண்டும் ட்ரோன்களால் தாக்கப்பட்டு இருக்கிறது.

ராஜஸ்தானின் பார்மர் நகரில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மற்றும் பட்காம் பக்கத்திலும் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. பஞ்சாபின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்த தாக்குதல் குறித்து ஒரு மூத்த அரசு அதிகாரி இந்துஸ்தான் டைம்ஸிடம் பேசும் போது, எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) அக்னூர், ஆர்.எஸ்.புரா ஆகிய இடங்களில் அத்துமீறல்களை நிறுத்தியது. இந்தத்தாக்குதலுக்காக சரியான பதிலடியையும் கொடுத்தது.’ என்றார்.

ஜம்முவின் கத்ரா மற்றும் மாதா வைஷ்ணோ தேவி பவன் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் இருளில் மூழ்கி விட்டன.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், " அமெரிக்காவிற்கு என்னுடைய பாராட்டுகள். நாட்டை பாதித்த, அமைதி, செழிப்பு, ஸ்திரத்தன்மைக்கான பயணத்தைத் தடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், இது ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது என்று தனது நாடு நம்புகிறது" என்று கூறியதையடுத்து, பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது.

உமர் அப்துல்லா பதிவு

ஜம்மு காஷ்மீர் முதல்வரான உமர் அப்துல்லாவும் குண்டுவெடிப்பு குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் "போர் நிறுத்தம் என்ன ஆயிற்று? ஸ்ரீநகர் முழுவதும் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டது குறிப்பிட்டு இருக்கிறார்.

முன்னதாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் மோதல் பரபரத்து கொண்டிருக்கும் வேளையில், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி போர் நிறுத்தப்படுவதாக அறிவித்தார்.

இது தொடர்பாக பதிவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘நீண்ட இரவாக அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழு மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

பொது அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்திய இரு நாடுகளுக்கும் வாழ்த்துகள்" என்று பதிவிட்டு இருந்தார். ஆனால், சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.