Donald Trump convicted: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Donald Trump: திருமணத்தை மீறிய உறவு குறித்து வெளியில் பேசாமல் இருக்க ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Donald Trump: 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடக்கூடிய தகவல்களை மறைக்க வணிக ஆவணங்களை பொய்யாக்கியதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும், இந்த ஆண்டு ஜனாதிபதி வேட்பாளருக்கான உத்தேச வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என்று நியூயார்க் நடுவர் குழு ஒருமனதாக தீர்ப்பளித்தது.
34 குற்றச்சாட்டுகளும் நிரூபணம் ஆனதால் ஜூலை 11ம் தேதி தண்டநை விவரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிட தயாராகி வரும் நிலையில், இந்தத் தீர்ப்பு அவருக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் டிரம்ப் மற்றும் அவரது அப்போதைய தரகர் மைக்கேல் கோஹன், மாநில மற்றும் கூட்டாட்சி சட்டங்களை மீறி திரைப்பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு ரகசியமாக பணம் செலுத்தியது சம்பந்தப்பட்டது. டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் ஜூரிகள் குற்றவாளி என தீர்ப்பளித்தனர்.