OpenAIக்கு எதிரான ANI வழக்கு: பதிப்புரிமையை மீறிய விவகாரம்.. DNPA, HT, Express, NDTV ஆகிய ஊடகங்களும் ஆதரவாக சேர முயற்சி
OpenAIக்கு எதிரான ANI வழக்கு: பதிப்புரிமையை மீறிய விவகாரம்.. DNPA, HT, Express, NDTV ஆகிய ஊடகங்களும் ஆதரவாக சேர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓபன் ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துக்கு எதிராக பதிப்புரிமையை மீறுவதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தொடர்ந்த வழக்கில் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனமும், தங்கள் குழுமத்தையும் மனுதாரராக சேர்க்க விண்ணப்பித்துள்ளது.
இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவான எச்.டி டிஜிட்டல் ஸ்ட்ரீம்ஸ்(HT Digital Streams), ஐஇ ஆன்லைன் மீடியா சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (Indian Express Media), என்டிடிவி கன்வர்ஜென்ஸ்(NDTV) மற்றும் தொழில்துறை அமைப்பான டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் (DNPA) ஆகியவை ஓபன்ஏஐ(OpenAI) நிறுவனத்திற்கு எதிராக, பதிப்புரிமையை மீறியதாக, ஏஎன்ஐ(ANI) செய்தி முகமை தொடர்ந்த பதிப்புரிமை வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில், ஜனவரி 27ஆம் தேதியான இன்று மனுதாரராக சேர விருப்பம் தெரிவித்து, தலையீட்டு விண்ணப்பத்தை தாக்கல் செய்தன.
இந்த வழக்கு, நிர்ணயித்துள்ள செய்திகளை எவ்வாறு சேகரிக்கிறது மற்றும் பரப்புகிறது என்பதைப் பாதிக்கும் என்பதால் இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் இதனைக் கேட்க முனைகிறது. DNPA உறுப்பினரான டைம்ஸ் குழுமம் மனு தாக்கலில் ஒரு பகுதியாக இல்லை.
ஏ.என்.ஐ. வழக்கின் சாராம்சம்:
ஏ.என்.ஐ வழக்கின் அடுத்த விசாரணை நாளை நடைபெற இருந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தலையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. OpenAI போன்ற நிறுவனங்கள், உரிமங்கள், அங்கீகாரம் அல்லது அனுமதி இல்லாமல் தங்கள் வலைத்தளங்கள் மற்றும் பிற தளங்களில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தும்போது அறிவுசார் சொத்துரிமைகளை மீறுகின்றன என்று ஏ.என்.ஐ நிறுவனம் வாதிட்டது.
OpenAIன் செயல்பாடு டி.என்.பி.ஏ உறுப்பினர்கள் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் வாழ்வாதாரத்தையும், ஒட்டுமொத்த இந்திய செய்தித் துறையையும் பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
OpenAI ஆனது சர்வதேச செய்தி வெளியீட்டாளர்களான அசோசியேட்டட் பிரஸ், தி அட்லாண்டிக் மற்றும் நியூஸ் கார்ப் ஆகியவற்றுடன் பணம் கொடுத்து உரிம ஒப்பந்தங்களைப் போட்டு, நாம் தேடும் தகவல்களை அவர்களின் செய்தியில் இருந்து பெற்றுத்தருகிறது.
OpenAI-ன் மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்கும் அவர்கள் ஒப்பந்தம் செய்த நிறுவனத்தில் இருந்து தரவுகள் கொடுக்கப்படுகின்றன.
AI மாதிரிகளைப் பயிற்றுவிக்க, உள்ளடக்கத்தைப் பயன்படுத்த OpenAI-க்கு அனுமதிகள் தேவை என்பதற்கான ஒப்புதல் இது என்று அது மேலும் கூறியது.
டி.என்.பி.ஏ தரப்பு கூறுவது என்ன?:
குறிப்பாக தேடுபொறிகள், சமூக ஊடக தளங்கள் முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்ள முயற்சித்து வருவதாக டி.என்.பி.ஏ தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஓபன் ஏ.ஐ போன்ற நிறுவனங்கள் பெரும்பாலும் வெளியீட்டாளர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்காமல், தங்களது செய்தி உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி பணமாக்குகின்றன என்று அது கூறியது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உட்பட பல அரங்குகளில் டி.என்.பி.ஏ இதை வாதிட்டது.
இந்திய வெளியீட்டாளர்களின் கூட்டமைப்பு எடுத்துரைக்கும் வாதம்:
மற்றொரு தொழில்துறை அமைப்பான இந்திய வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பு இந்த மாதம் இந்த வழக்கில் சேர முயன்றது. இந்த வழக்கின் தாக்கம் செய்தி வெளியீட்டாளர்கள் மற்றும் ஏஜென்சிகளுடன் நிற்கவில்லை என்று வாதிட்டது.
இந்த வழக்கின் முடிவு டிஎன்பிஏ உறுப்பினர்களால் பணியமர்த்தப்பட்ட பத்திரிகையாளர்களின் வாழ்வாதாரத்தையும், ஒட்டுமொத்த இந்திய செய்தித் துறையையும் பாதிக்கும் என்று இந்திய வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பினர் வாதிட்டனர்.
ஓபன் ஏ.ஐ-ன் வாதம்:
OpenAI வழக்கினை டெல்லி உயர் நீதிமன்றத்தில் எதிர்கொள்கிறது. அதன் சமர்ப்பிப்புகள் கேள்விக்குரிய தரவு எதுவும் இந்தியாவில் சேமிக்கப்படவில்லை என்பதால் இந்திய நீதிமன்றங்களுக்கு, தங்களைக் கட்டுப்படுத்த அதிகார வரம்பு இல்லை என்று வாதிட்டது.
கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, நீதிபதி அமித் பன்சால் தலைமையிலான ஒற்றை நீதிபதி பெஞ்ச், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவ கல்வியாளர் அருள் ஜார்ஜ் ஸ்காரியா மற்றும் வழக்கறிஞர் ஆதர்ஷ் ரமணஜூன் ஆகியோரை நியமித்தது.
அவர்களில் பெரும்பாலோர் AI நிறுவனங்கள் பதிப்புரிமை பெற்ற, உள்ளடக்கத்தைப் படிக்கும்படி, தொழில் நுட்பத்தை பயிற்சித்தனர். அமெரிக்கா உட்பட எங்கும் இதுதொடர்பான வழக்கு இன்னும் முடிவடையவில்லை. இன்னும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும், பயனர்கள், தங்கள் தனிப்பட்ட கருத்துகள் மற்றும் பொது இடுகைகளை அனுமதியின்றி, AI வழிமுறைகளைப் பயிற்றுவிக்க பயன்படுத்தியதற்காக லிங்க்ட்இன் போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

டாபிக்ஸ்