Pradhan Mantri Insurance: வெறும் 20 ரூபாயில் 2 லட்சம் இன்சூரன்ஸ் இருக்கு தெரியுமா ? இப்போவே போடுங்க!
Pradhan Mantri Insurance: எல்.ஐ.சி தொடங்கி பல தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் எண்ணற்ற காப்பீடு திட்டங்களை மக்கள் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும் பல காப்பீடுகள் நம்முடைய அவசர தேவைக்கு பயன்படுகின்றன. நம் குடும்பத்தில் எவருக்கேனும் ஏற்படும் திடீர் விபத்து அல்லது மரணத்தின் போது நம்முடைய முதல் யோசனையாக தோன்றுவது "ஏதேனும் இன்சூரன்ஸ் போட்டு இருக்கலாமே ? " என்பது தான். இன்சூரன்ஸ் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவிகரமனதாக இருப்பதோடு மட்டுமில்லாமல், இறந்த நபரின் பெரிய கடமையாகவும் இருக்கிறது.
எல்.ஐ.சி தொடங்கி பல தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் எண்ணற்ற காப்பீடு திட்டங்களை மக்கள் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. காப்பீடுகளில் இரு வகைகளான ஆயுள் காப்பீடு (லைஃப் இன்சூரன்ஸ்) மற்றும் மருத்துவக் காப்பீடு (ஹெல்த் இன்சூரன்ஸ்) ஆகியவைகளில் பல உட்பிரிவு திட்டங்கள் உள்ளன. தமிழ்நாடு அளவில் மிகவும் பிரபலமான கலைஞர் காப்பீட்டு திட்டம் உள்ளது. அதைப் பின்பற்றி அறிமுகப்படுத்தப்பட்ட மத்திய அரசின் தேசிய அளவிலான ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டமும் அவசர மருத்துவ சிகிச்சை பெறும் எண்ணற்ற பாமர மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.
அதேபோன்று 2015ல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பிரதம மந்திரி காப்பீடு திட்டங்கள் குறித்து இங்கு அறிவோம்.
1. PMSBY எனப்படும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா (பிரதம மந்திரி விபத்து காப்பீடு திட்டம்)
2. PMJJBY எனப்படும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா (பிரதம மந்திரி ஆயுள் காப்பீடு திட்டம்)
1. PMSBY என்பது விபத்தால் மரணமோ அல்லது விபத்து மூலம் நிரந்தர உடலுறுப்பு செயலிழப்பு ஏற்படும் பட்சத்தில் 2 லட்சம் நாமினிக்கு பெற்றுத் தரலாம்.
எப்படி இணைவது ?
இத்திட்டத்தில் இணைய தங்களுக்கு வங்கிக் கணக்கு அல்லது அஞ்சலகத்தில் கணக்கு இருந்தால் போதுமானது.
வயது :
18 வயது முடிந்த 70 வயதிற்குள் இருக்கும் எவரும் இத்திட்டத்தில் இணையலாம்.
பிரீமியம் :
ஒர் உறுப்பினருக்கு ஆண்டுக்கு ரூ.20/- வீதம் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்தோ அஞ்சலக கணக்கிலிருந்தோ பிடித்தம் செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் கவரேஜ் காலத்தின் ஜூன் 1 ஆம் தேதி அல்லது அதற்கு முன் 'ஆட்டோ டெபிட்' வசதி மூலம் கணக்கு வைத்திருப்பவரின் வங்கி / அஞ்சலகக் கணக்கிலிருந்து பிரீமியம் பிடிக்கப்படும்.
கவரேஜ் காலம் :
ஜூன் 1 முதல் மே 31 வரை வருடாந்திர பிரீமியம் கணக்கிடப்பட்டு வயதுவரம்பு 75 ஆகும் வரை பாலிசி செல்லத்தக்கதாகும்.
இத்திட்டத்தைப் பற்றி மேலும் அறிய அரசின் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடலாம்.
https://jansuraksha.gov.in/Forms-PMSBY.aspx
2. PMJJBY ஏதேனும் ஒரு காரணத்தால் ஏற்படும் மரணத்திற்கு ஆயுள் காப்பீடு வழங்குகிறது.
18 முதல் 50 வயதுக்குட்பட்ட அனைவரும் இத்திட்டத்தில் இணையலாம். ஆண்டு பிரிமியம் ரூபாய் 436 ஆகும். மற்றபடி PMSBY திட்டத்தில் இருக்கும் அனைத்து நிபந்தனைகளும் இதற்குப் பொருந்தும்.
கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஒப்புதல் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். https://www.jansuraksha.gov.in/Files/PMJJBY/English/ApplicationForm.pdf#zoom=250
நாமே எதிர்பாராமல் நம்மையும் அறியாமல் ஏற்படும் மரணத்திலிருந்து நம் குடும்பத்தை பொருளாதார ரீதியாக காக்க இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாகும்.

டாபிக்ஸ்