Fact Check: மாலத்தீவிடம் இருந்து 28 தீவுகளை இந்தியா வாங்கியதா.. வைரலாகி வரும் சோஷியல் மீடியா பதிவுகள் உண்மையா?
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
கூற்று: மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியது இந்தியா.
உண்மை: இத்தகவல் தவறானதாகும். மாலத்தீவில் 28 தீவுகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான திட்டங்களையே இந்தியா செய்யவுள்ளது.
மாலத்தீவில் 28 தீவுகளை இந்தியா வாங்கியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
உண்மை சரிபார்த்தல்
இந்தியா மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் தேடியது.
இத்தேடலில் மாலத்தீவில் 923 கோடி மதிப்பிலான திட்டங்களை இந்தியா தொடங்கியதாக இந்தியா டுடே இணையத்தளத்தில் செய்தி ஒன்று வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் இந்திய வெளியுறவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த செய்தி வெளியீட்டிலும் இத்திட்டம் தொடர்பான செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அதேபோல் வெளியுறவுத்துறையின அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் “Official Handover of the Water and Sewerage Facilities in 28 Island” என்று தலைப்பிட்டு இத்திட்டங்கள் காணொலி வாயிலாக தொடங்கப்படும் வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.
மாலத்தீவு வீடியோ
அந்த வீடியோவிலும் மாலத்தீவிலிருக்கும் 28 தீவுகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான திட்டங்கள் தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தேடுகையில் மாலத்தீவில் 28 தீவுகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான திட்டங்களை இந்தியா உதவியுடன் தொடங்கியதாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
மாலத்தீவு அதிபர் அலுவலத்திலிருந்தும் வெளிவந்திருந்த செய்தி வெளியீட்டிலும் இத்திட்டம் தொடர்பான செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் இந்தியா மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியதாக பரவும் தகவல் தவறானது என்பதும், மாலத்தீவின் 28 தீவுகளுக்கு பயன்படவிருக்கும் திட்டம் ஒன்றையே தொடங்கவுள்ளது என்பதும் தெளிவாகின்றது.
தொடர்ந்து தேடுகையில் PIB Facheck-ம் இதை உறுதி செய்து பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
இந்தியா மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் இந்தியா மாலத்தீவின் 28 தீவுகளுக்கு பயன்படவிருக்கும் திட்டம் ஒன்றையே தொடங்கவுள்ளது. இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பொறுப்புத்துறப்பு
இந்தச் செய்தி முதலில் newschecker-இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.
மாலத்தீவு, அதிகாரப்பூர்வமாக மாலத்தீவு குடியரசு, மற்றும் வரலாற்று ரீதியாக மாலத்தீவு தீவுகள் என்று அறியப்படுகிறது, இது இந்தியப் பெருங்கடலில் தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு மற்றும் தீவுக்கூட்ட மாநிலமாகும். மாலத்தீவு இலங்கை மற்றும் இந்தியாவிற்கு தென்மேற்கே உள்ளது, ஆசிய கண்டத்தின் நிலப்பரப்பில் இருந்து சுமார் 750 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
டாபிக்ஸ்