Arvind Kejriwal: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு.. ‘கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு இருக்கு’ - சரமாரியாக சாடிய நீதிபதி!
Arvind Kejriwal: அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குநரகம் கைது செய்ததை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
இது குறித்து உயர்நீதிமன்றம், “கெஜ்ரிவாலை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் மத்திய அரசிடம் இருக்கிறது. டெல்லி மதுபான கொள்கை உருவாக்கத்தில் மனுதாரர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றி உள்ளார்.” என்று கூறியிருக்கிறது.
முன்னதாக டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சஞ்சய் சிங் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். சஞ்சய் சிங் அக்டோபர் 4, 2023 அன்று அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார், கெஜ்ரிவால் இந்த ஆண்டு மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்டார்.
