தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Delhi Hc Disposes Mahua Moitra House Eviction Plea Says Seek Permission From Read More

Mahua Moitra: அரசு பங்களாவை காலி செய்யும் விவகாரம்: மஹுவா மொய்த்ரா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்

Manigandan K T HT Tamil
Jan 04, 2024 12:49 PM IST

மஹுவா மொய்த்ரா தனது மனுவை வாபஸ் பெறவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா (PTI file photo)

ட்ரெண்டிங் செய்திகள்

ஜனவரி 7-ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்ற நோட்டீஸை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மஹுவா மொய்த்ரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜனவரி 7-ம் தேதிக்குப் பிறகு தனது அரசு இருப்பிடத்தைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதி கோரி எஸ்டேட் இயக்குநரகத்தை அணுக வேண்டும் என்று கூறியது. சட்டத்திற்கு உட்பட்டு மட்டுமே அவரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மொய்த்ரா தனது மனுவை வாபஸ் பெறவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

எஸ்டேட் இயக்குநரகம் என்பது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு துறையாகும், இது தங்குமிடங்கள் உட்பட மத்திய அரசாங்கத்தின் எஸ்டேட்களை நிர்வகிக்கிறது.

நீதிபதி சுப்பிரமணிய பிரசாத் கூறுகையில், "ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குடியிருப்பாளர் அதிக நேரம் தங்குவதற்கு அதிகாரிகள் அனுமதிக்க விதிகள் அனுமதிக்கின்றன.

எஸ்டேட் இயக்குநரகத்தில் மனு தாக்கல் செய்யுங்கள், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நீதிபதி கூறினார்.

எஸ்டேட் இயக்குநரகத்தின் டிசம்பர் 11 உத்தரவை ரத்து செய்யுமாறு மஹுவா மொய்த்ரா நீதிமன்றத்தை அணுகியிருந்தார். 2024 பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அவையைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று எஸ்டேட் இயக்குநரகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.

மஹுவா மொய்த்ரா "unethical conduct" உடன் நடந்ததாக நெறிமுறைக் குழு கண்டறிந்தததாகக் கூறி அவர் மக்களவையில் இருந்து வெளியேற்றப்பட்டார். மக்களவையில் அதானி குழுமம் குறித்த தனது கேள்விகளை வெளியிட்டதற்கு பிரதிபலனாக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் பரிசுகளை வாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மொய்த்ரா தனது நாடாளுமன்ற லாகின் விவரங்களை தொழிலதிபருடன் பகிர்ந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

தன்னை மக்களவையில் இருந்து வெளியேற்றியதை எதிர்த்து மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

மொய்த்ராவின் மனு தொடர்பாக மக்களவை செயலாளர் ஜெனரலுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்