தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Arvind Kejriwal: ’பாஜகவில் சேர சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள்’ கதறும் கெஜ்ரிவால்!

Arvind Kejriwal: ’பாஜகவில் சேர சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள்’ கதறும் கெஜ்ரிவால்!

Kathiravan V HT Tamil
Feb 04, 2024 05:37 PM IST

”ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் ஏற்கனவே நீதிமன்றக் காவலில் உள்ளனர்”

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் (Photo: Sanjeev Verma/Hindustan Times)

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒருபோதும் பாஜகவில் சேர மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவில் சேர்ந்தால் எங்களை விட்டுவிடுவோம் என்று கூறுகிறார்கள். பாஜகவில் சேர மாட்டேன் என்று சொன்னேன். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை" என்று கெஜ்ரிவால் கூறினார்.

டெல்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் டெல்லி நீதிமன்றத்தை நாடிய நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த கருத்தை கூறி உள்ளார். 

அமலாக்கத்துறை அடுத்தடுத்து அனுப்பிய ஐந்து சம்மன்களுக்கு ஆஜராகவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் மீது நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையில், டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு ஞாயிற்றுக்கிழமை முதல்வருக்கு புதிய நோட்டீஸ் அனுப்பியது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு திங்கள்கிழமைக்குள் ஆதாரங்களுடன் பதிலளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

தனது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக கட்சியை விட்டு வெளியேறுமாறு ஏழு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு பாஜக தலா ரூ.25 கோடி வழங்கியதாக கெஜ்ரிவால் கடந்த வாரம் குற்றம் சாட்டினார். பாஜகவால் அணுகப்பட்டதாகக் கூறப்படும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை வெளியிடுமாறு குற்றப்பிரிவு அவரிடம் கேட்டுள்ளது.

பிப்ரவரி 2 ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தின் சம்மனுக்குஐந்தாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்து சட்டவிரோதமானது என ஆம் ஆத்மி கட்சி விமர்சனம் செய்தது. இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் ஏற்கனவே நீதிமன்றக் காவலில் உள்ளனர்.