Darwin Day 2024: டார்வின் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? முக்கியத்துவம், வரலாறு என்ன?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Darwin Day 2024: டார்வின் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? முக்கியத்துவம், வரலாறு என்ன?

Darwin Day 2024: டார்வின் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? முக்கியத்துவம், வரலாறு என்ன?

Karthikeyan S HT Tamil
Feb 12, 2024 08:04 AM IST

Darwin Day 2024: ஒவ்வொரு பிப்ரவரி 12 ஆம் தேதி அன்று டார்வின் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஏன் கொண்டாடப்படுகிறது, அதன் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

சார்லஸ் டார்வின்
சார்லஸ் டார்வின்

குரங்கில் இருந்து தான் மனிதன் வந்தான் என ஓங்கி ஒலித்தவர் அறிவியலாளர் சார்லஸ் டார்வின். உலகமே ஒரு கொள்கையை ஏற்றுக்கொண்டு அந்த பாதையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது தனது கருத்தை துணிச்சலுடன் பதிவு செய்ய தனி தைரியம் வேண்டும். அப்படியொரு புரட்சிகரமான கருத்தை விதைத்தவர் தான் சார்லஸ் டார்வின். அவரை நினைவு கூறும் தினம் தான் 'டார்வின் தினம்'.

டார்வின் தினம் உருவானது எப்படி?

பிப்ரவரி 12, 1809 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் சுரூஸ்பெரி என்ற டவுனில் ராபர்ட் டார்வின், சுசானா டார்வின் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார் சார்லஸ் டார்வின். இயற்கை ஆர்வலரான அவருடைய இயற்கைத் தேர்வின் மூலம் பரிணாம வளர்ச்சி பற்றிய அறிவியல் கோட்பாடு நவீன பரிணாம ஆய்வுகளின் அடித்தளத்தை உருவாக்கியது.

தன் அறிவியல் கண்டுபிடிப்புகளை 1859 ஆம் ஆண்டு 'உயிரினங்களின் தோற்றம்' (The Origin of Species by Natural Selection) என்ற நூலாக வெளியிட்டார். 'குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் உருவானான்' என்பதை உலகிற்கு தெரிவித்தார்.

1997 முதல், நியூயார்க் நகர கல்லூரியின் பேராசிரியர் மாசிமோ பிக்லியூசி பிப்ரவரி 12 ஆம் தேதியை டார்வின் தினமாகக் கொண்டாடத் தொடங்கினார். 2015 ஆம் ஆண்டில், அமெரிக்க சட்டமியற்றுபவர் ஜிம் ஹைன்ஸ் ஒரு தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். அது பிப்ரவரி 12 ஆம் தேதியை டார்வின் தினமாக அறிவிக்க வழிவகுத்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12 அன்று சார்லஸ் டார்வின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் டார்வின் தினம் அனுசரிக்கப்படுகிறது.

டார்வின் தினத்தின் முக்கியத்துவம்?

சார்லஸ் டார்வினின் அறிவார்ந்த கொள்கைகளை மாணவர்கள் பின்பற்ற ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் பிப்ரவரி 12ம் தேதி டார்வின் தினம் கொண்டாடப்படுகிறது. இது மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், மக்களை விஞ்ஞான வழிமுறைகள் மூலம் உண்மையை ஆராய தூண்டுகோளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.