தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Covid -19 India Reports 11,109 Fresh Covid Cases

Covid -19 : கொரோனா : இந்தியாவில் 11,109 பேருக்கு தொற்று, 29 பேர் உயிரிழப்பு

Priyadarshini R HT Tamil
Apr 14, 2023 09:43 AM IST

Corona Virus : இந்தியாவில் 11,109 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 49,000 ஆகிறது.

கொரோனா வைரஸ் பரிசோதனை
கொரோனா வைரஸ் பரிசோதனை

ட்ரெண்டிங் செய்திகள்

இன்று 11,109 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். இந்த வாரத்தில் தொடர்ந்து 5வது நாளாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று நாட்டில் 10,158 பேர் பாதிக்கப்பட்டனர். அதற்கு முன்தினம் 7,830 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

சிகிச்சைபெற்று 4,42,16,583 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்க 98.71 சதவீதமாக உள்ளது. 24 மணி நேரத்தில் 29 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 5,31,064 ஆக உள்ளது. இறப்பு 1.19 சதவீதமாக உள்ளது. இத்தகவலை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தமிழக நிலவரம் -

தமிழகத்தில் குழு பாதிப்பு இல்லை எனக்கூறி வந்த நிலையில், கோயம்புத்தூரில் இயங்கும் தொழிற்நிறுவனத்தில் 6 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது குழு பாதிப்பை உறுதிபடுத்தியிள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், 12 வயதிற்கு கீழான சிறார்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பரிசோதனைகளை சிறார்கள் மத்தியில் அதிகரித்தால் உண்மை கொரோனா பாதிப்பைக் கண்டறிய முடியும்.

கூட்டமாக பள்ளியில் கூடும் சிறார்கள் மத்தியில் கொரோனா பரவல் எளிதில் நடக்கும். அவர்களுக்கு பாதிப்பு பெருமளவு இல்லை என்றாலும், வீடு திரும்பும்போது அவர்களால் இணைநோய்கள், நோய் எதிர்ப்புத் திறன் குறைந்த வயதானவர்கள் பாதிக்கப்பட்டு இறப்பு நிகழ முடியும் எனவே அவர்களிடையே பரிசோதனைகளை அதிகரித்து, பாதிப்பிருந்தால் தனிமைப்படுத்துவது சிறந்தது என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். எனவே மாணவர்களால் வயதானவர்கள், நோய் எதிர்ப்புத்திறன் குறைந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, உயிரிழப்புகள் நிகழ்வதைத் தடுக்க 5ம் வகுப்பிற்கு கீழாக பயிலும் மாணவர்களுக்கு உடனடியாக விடுமுறை அறிவிக்கலாம் எனவும் வல்லுனர்கள் கூறுகிறார்கள். எனவே நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பை கருத்தில்கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முன்வரவேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், அதன் TPRக்கு ஏற்ப எத்தனை பரிசோதனைகள், எந்த அடிப்படையில் யாருக்கு செய்யப்படுகின்றன என்று கூறுவதன் மூலம் அரசு மக்களிடையே மேலும் நம்பகத்தன்மையை பெருகிறது.

கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் இணைநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் கொரோனாவால் உயிரிழந்து வருவது நடக்கிறது. அந்த உயிரிழப்பை குறைக்க அறிவியல் ரீதியான விளக்கங்களை அரசு ஏற்க வேண்டும். அதிக பாதிப்புக்கு உள்ளாகும் சிறார்கள் மத்தியில் பரிசோதனையை அதிகரித்து, அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள வயதானவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கலாம் என்ற கருத்தை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மருத்துவர் புகழேந்தி வலியுறுத்துகிறார்.

பரிசோதனைகளை அதிகரிக்காமல் இருந்தால் வைரஸ் பல்கி பெருகி மேலும் உருமாற்றம் நிகழ (இந்தியாவில் தற்போது XBB.2.3 எனும் கூடுதல் உருமாற்றம் கொரோனா பரவி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்)வாய்ப்புள்ளதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்