தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Congress President Election, Trending News For National And World On September 29

Cong prez polls: போட்டியில் இருந்து விலகினாா் அசோக் கெலாட் - முக்கிய செய்திகள்

Karthikeyan S HT Tamil
Sep 29, 2022 05:46 PM IST

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து அசோக் கெலாட் விலகல், ஐஏஎஸ் அதிகாரியின் சர்ச்சை பேச்சு உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

ட்ரெண்டிங் செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் விலகுவதாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மனு வாங்கியுள்ளார். நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் குபேர் அங்காடியில் மீன்கள் ஏலம் விடவும், விற்பனை செய்யவும் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கக் கோரி ஏராளமான மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிகாரில் இலவச நாப்கீன் கேட்ட மாணவிகளிடம் அடுத்து காண்டம் கேட்பீர்களா என பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹர்ஜோத் கவுர் கேள்வியெழுப்பியது சர்ச்சையாகியுள்ளது.

பாஜக தலைமையிலான குஜராத் மாநில அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைத்து வருவதாகவும், நாங்கள் எங்களது விளம்பரத்திற்காக பணத்தினை செலவழிக்கவில்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மறைந்த ஒடிசா முன்னாள் முதல்வர் ஜே.பி. பட்நாயக்கின் மனைவியான ஜெயந்தி பட்நாயக் காலமானார்.

திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி, பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 32 வயதான விஜய் என்பவரின் வயிற்றில் இருந்து 63 ஸ்பூன் கைப்பிடிகளை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,272 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தன் நிறம் குறித்து தொடர்ந்து கணவன் கேலி செய்து வந்ததால், கணவனை கோடாரியால் வெட்டி பிறப்புறுப்பை துண்டாக்கி கொலை செய்த சங்கீத என்ற பெண்ணை காவல் துறையினா் கைது செய்தனா்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் இரண்டாவது முறையாக பேருந்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

பிகாரில் உள்ள சோஹாக்பூர் என்ற குக்கிராமத்தில் முதல்முறையாக 25 வயதான ராகேஷ் குமார் என்பவர் அரசுப்பணிக்கு தேர்வாகியுள்ளாா்.

வடமேற்கு தில்லியின் கஞ்சவாலா பகுதியில் எரிந்த காருக்குள் கருகிய நிலையிலிருந்த சடலம் ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர்.

கம்போடியா நாட்டில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு இருக்கும் கம்போடியா அரசின் கலை பண்பாட்டு துறை உதவியுடன் இன்று திறக்கப்பட்டது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மியான்மா் ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

தெற்கு சாண்ட்விச் தீவில் 7.0 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

ரஷ்யாவில் இருந்து ஃபின்லாந்துக்கு சுற்றுலா விசாவினைப் பயன்படுத்தி சுற்றுலா வரும் ரஷ்ய மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்