Vijayadharani: பாஜகவில் இணைந்தார் விஜயதாரணி..உச்சகட்ட அதிர்ச்சியில் தமிழக காங்கிரஸ்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Vijayadharani: பாஜகவில் இணைந்தார் விஜயதாரணி..உச்சகட்ட அதிர்ச்சியில் தமிழக காங்கிரஸ்!

Vijayadharani: பாஜகவில் இணைந்தார் விஜயதாரணி..உச்சகட்ட அதிர்ச்சியில் தமிழக காங்கிரஸ்!

Karthikeyan S HT Tamil
Feb 24, 2024 03:09 PM IST

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்வானவர் விஜயதாரணி.

பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி.
பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி.

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் அவர் இணைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இருந்து தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் விஜயதாரணி. கட்சியில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று காங்கிரஸ் தலைமை மீது விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகவும் பாஜகவில் இணையப்போவதாகவும் கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால், பாஜக வலையில் விஜயதாரணி சிக்கமாட்டார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று பிற்பகலில் டெல்லியில் நடைபெற்ற பாஜக கூட்டத்துக்கு பிறகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளார்.

பின்னணி என்ன?

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எச். வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது அந்த தொகுதியில் விஜயதரணி போட்டியிட காங்கிரஸில் வாய்ப்பு கேட்டார். ஆனால், கட்சித் தலைமை விஜயதரணிக்கு வாய்ப்பு தராமல் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்திற்கு வாய்ப்பு கொடுத்தது. அவரும் வெற்றி பெற்று எம்பி ஆனார். அப்போது முதலே விஜயதரணி காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது. இருப்பினும், 2021 சட்டமன்றத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட விஜயதரணிக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டது. அவரும் வெற்றி பெற்று தற்போது, சட்டசபையில் காங்கிரஸ் கொறடாவாக உள்ளார். இதற்கிடையில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டும் என்று விஜயதாரணி காங்கிரஸ் மேலிடத்தை அனுகியதாக கூறப்படுகிறது.

ஆனால், சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டார். மேலும், வரும் லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் விஜய்வசந்த்துக்கே வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருப்பதாக கூறப்படுறது. இந்த நிலையில் விஜயதாரணி இன்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.