தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Congress Bharat Jodo Yatra To Resume On Friday After One-day Break

Congress Bharat Jodo Yatra: காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு இன்று ஓய்வு

Karthikeyan S HT Tamil
Sep 15, 2022 10:50 AM IST

காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்று ஒருநாள் ஓய்வுக்கு பிறகு நாளை மீண்டும் தொடங்கவுள்ளது.

இந்திய ஒற்றுமை நடைப்பயணம்.
இந்திய ஒற்றுமை நடைப்பயணம்.

ட்ரெண்டிங் செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் எம்.பி., ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த 7ஆம் தேதி தொடங்கினார். கன்னியாகுமரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை வழங்கி இந்த நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் 4 நாட்கள் யாத்திரையை முடித்துக் கொண்ட ராகுல், கடந்த 11ஆம் தேதி கேரளாவில் தொடங்கினார். அங்கு 7 மாவட்டங்களில் 19 நாட்களுக்கு யாத்திரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது கேரளாவில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. ராகுல் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நடைப்பயணம் நேற்றிரவு சாத்தனூரில் பொதுக்கூட்டத்துடன் முடிக்கப்பட்டது. மொத்தம் 150 கி.மீ கடந்துள்ள நிலையில், இன்று ஒருநாள் ஓய்வுநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை காலை கொல்லம் மாவட்டத்தில் இருந்து இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தொடங்கும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையில் 12 மாநிலங்கள், 2 ஒன்றிய பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் 3,500 கி.மீ தூரம் ராகுல் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்