தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Congress Bharat Jodo Yatra Resumes From Kollam District In Kerala

Congress Bharat Jodo Yatra: மீண்டும் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்!

Karthikeyan S HT Tamil
Sep 16, 2022 12:48 PM IST

காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கியது.

கேரளாவில் மீண்டும் நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல்.
கேரளாவில் மீண்டும் நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல்.

ட்ரெண்டிங் செய்திகள்

ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் நோக்கில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி நடத்தி வருகிறாா். கன்னியாகுமரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை வழங்கி இந்த நடைபயணத்தை கடந்த 7 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் 4 நாட்கள் நிறைவடைந்த நடைபயணம், தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. ராகுல் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும், குழந்தைகளுடன் புகைப்படம் எடுப்பது, முதியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது, சமூக ஆர்வலர்களுடன் கலந்துரையாடுவது என ராகுல் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த ஒரு வாரத்தில் 150 கி.மீ., தூரம் நடைபயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர்கள், நேற்று ஒரு நாள் ஓய்வு நாளாக அறிவித்தனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் 8-வது நாளான இன்று (செப்.16) ‘பாரத் ஜோடோ யாத்ரா’ நடைப்பயணத்தை கேரள மாநிலம் கொல்லத்தில் ராகுல் மீண்டும் தொடங்கியுள்ளார்.

கேரளாவில் 7 மாவட்டங்களில் 19 நாட்களுக்கு யாத்திரை மேற்கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையில் 12 மாநிலங்கள், 2 ஒன்றிய பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் 3,500 கி.மீ தூரம் ராகுல் நடைப்பயணம் மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்