Andra Condom War: பிரச்சார கருவியாக மாறிய ஆணுறை..! போட்டி போட்டு விநியோகம் - “அடுத்தது வயகராவா?” என விமர்சனம்
ஆந்திர அரசியலில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார கருவியாக ஆணுறை மாறியிருக்கும் சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தற்போதே தொடங்கிவிட்டன. கூட்டணி குறித்து, தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை அரசியல் கட்சியினிடையே நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை கூட தொடங்யுள்ளன.
அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற இருக்கிறது. எனவே அங்கு அரசியல் கட்சிகளிடையே தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கியிருக்கிறது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன
அந்த வகையிம் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், எதிர்கட்சியான தெலுங்கு தேசம் பல்வேறு வியூகங்களுடன் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளன.
ஆணுறை பிரச்சாரம்
பொதுவாக தேர்தல் பிரச்சாரம் என்றாலே பொதுமக்களை சந்திப்பது சாலையோர கடைகளில் சாப்பிடுவது, சமைப்பது, சாலைகளை சுத்தம் செய்வது, மக்களோடு அவர்களின் பணிகளில் ஈடுபடுவதை அரசியல் கட்சி வேட்பாளர்கள் செய்து வருவார்கள்.
இந்த முறை யாரும் எதிர்பார்த்திராத வகையில் வித்தியாசமாக ஆணுறை பாக்கெட்டை பிரச்சார கருவியாக எடுத்துள்ளது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள்.
இதுதொடர்பாக இரு கட்சிகளும் விமர்சனங்களையும் ஒருவருக்கொருவர் முன் வைத்து வருகின்ற போதிலும், பொதுமக்களிடையே ஆணுறை விநியோகமானது தொடர்ந்து படுஜோராக நடைபெற்று வருகிறது.
அரசியல் கட்சிகளின் சார்பில் விநியோகிக்கப்படும் ஆணுறையில் இரு கட்சிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருப்பது ஹைலைட்டான விஷயமாக உள்ளது. பொதுமக்கள் தரப்பில் தற்போது ஆணுறை தருகிறார்கள், அடுத்ததாக வயகிராவை தரப்போகிறார்களா என்ற கிண்டல் கருத்துகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.
முன்னதாக, “பல குழந்தைகள் இருந்தால், அதிக பணம் வழங்க வேண்டும், அதனால் தான் ஆணுறைகள் தருகிறோம் என்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம், மாநில வளர்ச்சிக்கு என்ன செய்யப் போகிறோம் என்றெல்லாம் பேசாமல், ஆணுறைகளை விளம்பரப்படுத்துவது கேவலமானது” என தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் விமர்சித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்