கனடாவில் இருந்து தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற்ற இந்தியா.. இந்திய - கனடா மோதலுக்குக் காரணம் என்ன?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  கனடாவில் இருந்து தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற்ற இந்தியா.. இந்திய - கனடா மோதலுக்குக் காரணம் என்ன?

கனடாவில் இருந்து தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற்ற இந்தியா.. இந்திய - கனடா மோதலுக்குக் காரணம் என்ன?

Marimuthu M HT Tamil
Oct 15, 2024 12:04 AM IST

கனடாவில் இருந்து தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற்ற இந்தியா.. இந்திய - கனடா மோதலுக்குக் காரணம் என்ன என்பது குறித்துப் பார்ப்போம்.

கனடாவில் இருந்து தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற்ற இந்தியா.. இந்திய - கனடா மோதலுக்குக் காரணம் என்ன?
கனடாவில் இருந்து தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற்ற இந்தியா.. இந்திய - கனடா மோதலுக்குக் காரணம் என்ன? (AP)

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே பிரச்னைகள் வெளியே வந்துள்ளன. இரு நாடுகளும் இப்போது தலா ஆறு தூதுவர்களை வெளியேற்றியுள்ளன. அதன்பின், 41 தூதரக அதிகாரிகளையும் இந்தியா கனடாவில் இருந்து திரும்பப்பெற்றது. 

கனடாவில் உள்ள தனது தூதரகத்தின் உயர் ஆணையரை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து இந்திய அரசாங்கத்தின் தூதரக அதிகாரிகளுக்கும், காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கும் இடையிலான தொடர்பு குறித்த விவரங்களை கனடா நாட்டின் காவல்துறை வெளியிட்டுள்ளது.

இந்திய தூதர் மற்றும் பிற இராஜதந்திரிகளுக்கு எதிரான கனடாவின் சமீபத்திய நடவடிக்கைகளை இந்தியா கடுமையாக எச்சரித்தது. மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியது.

கனடாவில் இருந்து இந்தியா தனது தூதர்களை திரும்பப் பெற்றது ஏன்?

இந்தியா-கனடா இடையிலான ராஜதந்திர சர்ச்சை இவ்வாறுதான் தொடங்கியது. 2023ஆம் ஆண்டு, செப்டம்பரில் கனட நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளால் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர பதற்றம் அதிகரித்தது. அந்த உரையில், தனது மண்ணைச் சார்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் தூதரக அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுவதை, தனது அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ட்ரூடோ பேசியிருந்தார்.

இந்த கருத்துகளை "அபத்தமானது மற்றும் உள்நோக்கம் கொண்டது" என்று இந்தியா நிராகரித்தது.

யார் இந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?

ஹர்தீப் சிங் நிஜ்ஜார், ஒரு காலிஸ்தான் பிரிவினைவாதி. அதாவது இந்தியாவில் இருந்து தனி சீக்கிய நாடு கோரும் போரா. 2023 ஜூன் மாதம் கனட நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கனடா குடியுரிமை பெற்றவர். ஆனால், இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தை ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஆதரித்தார். இவரது கொலைவழக்கில் இந்தியத் தூதரக அதிகாரிகள் செயலாற்றி இருப்பதாக கனடா அரசு கருதுகிறது.

நிஜ்ஜார் குறித்த இந்தியாவின் கேள்விகள்:

இதற்கிடையில், நிஜ்ஜார் படுகொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தை, கனடா அரசிடம் இந்தியா மீண்டும் மீண்டும் கேட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த ஆண்டு இந்தியா ஒரு விசாரணையையும் நிராகரிக்கவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் அந்த நாட்டில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசாங்கத்தின் தூதரக அதிகாரிகள் ஈடுபட்டிருப்பது குறித்த குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்களை வழங்குமாறு கனடாவிடம் கேட்டுக் கொண்டார்.

இருப்பினும், "இந்திய அரசாங்கத்தின் (ஜிஓஐ) தூதரக அதிகாரிகள், படுகொலைகள் மற்றும் வன்முறை நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட ஆதாரங்களை இந்தியாவுக்கு வழங்கியுள்ளதாக’’ கனடா கூறியுள்ளது.

ஜூன் 2024-ல், கனட பிரதமர் ட்ரூடோ சில மிக முக்கியப் பிரச்னைகளை சமாளிக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

காலிஸ்தான் பயங்கரவாதத்தை கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஏன் கண்டிக்கமாட்டார்?

கனடாவில் 2025ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன்னதாக, காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தை பிரதமர் ட்ரூடோ கையாண்ட விதம், பிரதமர் வேட்பாளருக்கான சிறந்த தேர்வாக ஜஸ்டின் ட்ரூடோவை அந்நாட்டில் நிலைநிறுத்தியுள்ளது. மேலும் அவர் வலதுசாரியாக இல்லாததுபோல் காட்டுகிறது.

உலகிலேயே இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் கனடாவும் உள்ளது. தற்போது, கனடாவில் 7,70,000 க்கும் அதிகமான சீக்கிய மக்கள் உள்ளனர். அதன் மொத்த மக்கள் தொகையில் சுமார் 2 சதவீதம் சீக்கியர்கள் ஆகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.