1960க்கு பிறகு சரிவில் சீனா மக்கள் தொகை...முதல் இடத்துக்கு முன்னேறும் இந்தியா
China Population Declines: கடந்த 1960களுக்கு பிறகு சீனாவின் மக்கள் தொகை முதல் முறையாக சரிவை கண்டுள்ள நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை முன்னேறியுள்ளது.

சரிவை சந்தித்து வரு சீனா மக்கள் தொகை (கோப்புப்படம்)
உலக அளவில் அதிக மக்கள் தொகை நாடாக கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக சீனா இருந்து வந்தது. இதையடுத்து அந்த நாட்டின் மக்கள் தொகை 1960களுக்கு பிறகு சரிவை சந்திக்க தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக சீனாவின் தேசிய புள்ளிவிவர நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சீனாவின் மக்கதொகை 2022ஆம் ஆண்டில் 141.18 கோடி என இருந்தது. இது 2021ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 8.50 லட்சம் வரை குறைவாக உள்ளது.
2021ஆம் ஆண்டில் 1.06 கோடியாக இருந்த குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கை கடந்த 2022இல் 95.6 லட்சமாக குறைந்துள்ளது. அதேபோல் பிறப்பு விகதமும் 1000 பேருக்கு 7.52 என்று இருந்த விகிதம் 6.77 என குறைந்துள்ளது. அதேபோல் இறப்பு விகிதமானது 7.37 என இருந்துள்ள நிலையில், 0.6 சதவீதம் அதிகமாகியுள்ளது.
